கா(நா)ட்டில் இருந்து தப்பிய மான்குட்டி..!

அடர்ந்த அந்த காட்டுப்பகுதியை ஒட்டியே கருணாவின் பண்ணை வீடு இருந்தது..! பண்ணை  வீடு  மிகவும் அழகானது..! மலர்த்தோட்டங்கள் காய்கறிச் செடிகள் மரங்கள் என ரம்மியமாக  இருக்கும்..! மேலும் அங்கே ஒரு ஆட்டுபண்ணை,கறவை மாடுகள் இருந்தன. கோழிகளையும் வளர்த்து  வந்தான் கருணா..! 
பண்ணையை  அடுத்த காட்டுக்குள்.   சிங்கம் ,புலி கரடி போன்ற கொடிய மிருகங்கள் இருந்தன. மான்கள்,காட்டு மாடுகள்,குரங்குகள் போன்ற ஏனைய விலங்குகளும் வசித்து வந்தன.காட்டு விலங்குகள் பண்ணைக்குள்
புகுந்துவிடாமல் இருக்க வலிமையான கம்பி வேலி அமைத்து இருந்தான்...! 
 

ஒருநாள் நள்ளிரவில் ஏதோ  ஒரு காட்டு மிருகத்துக்கு இரையாவதில் இருந்து  தப்பித்த அழகிய மான் குட்டி ஒன்று.எப்படியோ  கம்பி வேலியை  தாண்டி ஆட்டு பண்ணைக்குள் புகுந்து  விட்டது..! உயிர்பயத்தில் ஓடிக்களைத்த மான் அங்கேயே  படுத்து உறங்கிவிட்டது..!

அதிகாலையில் விழித்து கொண்ட மான்  ஆடுகள்,மாடுகள்,கோழிகள் என அவை வளரும் விதம் கண்டு அந்த பண்ணை  சூழலில்  மனதை பறிகொடுத்து  விட்டது..! எவ்வளவு பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இங்கு இவைகள் வசிக்கின்றன..என ஏங்கி போன மான் மெல்ல அங்கிருந்த ஒரு ஆட்டிடம் பேச்சு கொடுத்தது..!
உங்களை எல்லாம் மனிதர்கள் எவ்வளவு அன்புடன் உணவு கொடுத்து
வளர்த்து வருகின்றனர் கொடுத்து  வைத்தவர்கள் நீங்கள்  நானும் உங்களுடன் தங்கிவிடலாமா ..?

அதனை கேட்ட ஆடு  ஒன்று  உரக்க  சிரித்தது..!


ஏன் சிரிக்கின்றாய்  நான் வந்தது பிடிக்கவில்லையா..?

காட்டில்  இருந்து  தப்பிய அழகிய மானே உனக்கு ஏன் இந்த துர் நிலை நீகாட்டுக்கே சென்றுவிடு..!

இது  துர் நிலையா நீங்கள்  எல்லாம் நன்றாகத்தானே உள்ளீர்கள்..?

நீ காட்டுக்குள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வாய்..? ஆடு கேட்டது..

அது  சொல்ல முடியாது  எப்போது வேண்டுமானாலும் சாகலாம்  இது தான்  துர் நிலை..!

உயிர் தப்பி வாழ்ந்தால்  பல்லாண்டுகாலம்  உயிர் வாழ முடியும் தானே..?
ஆமாம்  முடியும்..!


ஆனால்  எங்களால்  முடியாது...!

ஏன்...?

நாங்கள்  வளக்கப்படுவதே கொல்லபடுவதற்க்குதான்...! எங்கள்  சாவு  எப்போது  என்று எங்களுக்கே  தெரியும்..! வளர்ந்து ஒரு நிலையை அடைந்த பிறகு உடனே மனித உணவுக்காக கொல்ல பட்டு விடுவோம்..! எங்களுடன்  வளர்ந்தவர்கள் தினமும் ஒவ்வொருவராக கொல்ல படுகின்றோம்..! உனக்கு  உன் உயிரை காப்பாற்றி கொள்ள தப்பித்து ஓட சுதந்திரம் உள்ளது  எங்களால் அது கூட முடியாது..!

ஒஹ்ஹ்...!

இந்த கோழிகள்  எல்லாம் அன்புடன்தானே  வளர்க்க படுகின்றன...?

ஹா..ஹா  வளர்க்கபடும்  போது அன்பு காட்டுவது போலதான் தோன்றும்..! ஆனால் வளர்த்தவனே இந்த கோழிகளை  கொன்று குழம்பு  வைத்து சாப்பிட்டு விடுவான்..!

ஐயோ..!

சரி  இந்த மாடுகள்  சுத்தமாக நிறைய  உணவு கொடுக்க பட்டுதானே உள்ளன..!

அதிலும் காரணம் உள்ளது..
என்ன காரணம்...?

புரியாத  காட்டு மானே  உன் தாயிடம்  எவ்வளவு காலம் தாய்ப்பால் குடித்தாய்..!

ம்ம் அது  தெரியவில்லை என் விருப்பம் போல குடித்தேன்..!

இந்த மாடுகளின் கன்றுகளுக்கு   அந்த உரிமை  கிடையாது..கன்றுகளுக்கு  கொடுப்பது போல கொடுத்துவிட்டு மொத்த பாலையும் அபகரித்து மனிதன் குடித்து விடுவான் அதற்காகத்தான் இந்த பாசம்,பாது காப்புஎல்லாம்...!

மானுக்கு காட்டின் அருமை புரிந்தது...! 

இந்த வாழ்க்கை தேவையா மான்குட்டியே...?

 என கேட்ட ஆட்டினை பரிதாபமாக பார்த்த மான் குட்டி காட்டுக்குள்  செல்ல எத்தணிக்கையில் காட்டில் வெகு  தூரத்தில் வரிப்புலி  ஒன்று
தட்டுப்பட அஞ்சி நின்றது...!

அப்போது பண்ணை வீட்டுக்குள்  இருந்து  ஒருவன் வெளியே  வர ...! ஆடு  எச்சரித்தது  இந்த  மனிதன் உன்னை பார்த்துவிட்டால் என்ன ஆவாய் என்றே  புரியவில்லை ஓடிவிடு..!

மனிதன் அருகே வர.... காட்டில்  புலியின் சத்தமும் சற்று நெருங்கியது..! காட்டுக்குள்ளாவது  ஓடி  தப்பிக்க முடியும் இங்கே....??  சட்டென முடிவெடுத்த மான் துள்ளி குதித்து காட்டுக்குள் ஓடி மறைந்தது..!



>