கருவேல மனம்...!

இப்போ இந்த இடத்த  விக்காட்டி என்ன..?

அதான்  நல்ல விலை போகுதுல்ல வித்துடலாம்..!

இல்ல அமுதன் மெட்ராஸ்ல சம்பாதிச்சு சொந்த  ஊர்ல ஒரு இடம் வாங்கி போட்டு இருக்கான்னு ஒரு பேரு..! இப்போ  இத  வித்தா  எதோ கடன் ஆயிட்டான் அதான் விக்கிறான்னு ஊர்ல சொல்லுவாங்க..!-- இடத்தை விற்காமல் செய்ய ஆனந்தன் வாதாடினான்..!

அட நீ வேற இதெல்லாம் பாத்தா ஆகுமா..? மொதல்ல நான் ஊர்ல இடம் வாங்கினதே தப்பு  எதோ ஊர் பாசத்துல வாங்கிட்டேன்  இதே மெட்ராஸ் பக்கம் ஒரு கால் கிரவுண்டு வாங்கி போட்டு இருந்தாலே போதும் இப்போ  விலை எங்கேயோ போய் இருக்கும்.! 2 லட்ச ரூபாய்க்கு வாங்கி 8 லட்சத்துக்கு விக்கிறேன்..! இத வாங்கினதே ஒரு முதலீட்டுக்காக தானே இங்க வந்து என்ன வீடாகட்ட போறோம் ..!

இடத்த விக்கிறதுல உனக்கு வருத்தமே இல்லையா..?

கொஞ்சம் கூட இல்ல அதோட  எனக்கு இந்த தொகை  ஒரு முக்கிய தேவைக்கு உதவுது அதுல எனக்கு சந்தோசம்தான்..! 

மஞ்சள் நிறத்தில் பூப்பூத்து இருந்த அந்த சீமை கருவேல மரத்தடியில் நின்று தான் பேசிகொண்டுஇருந்தோம். இந்த இடத்தை நான் வாங்கிய போதே நாலடி உயரத்தில் கருங்கற்கள் நட்டு முள்கம்பி  வேலி இருந்தது. இந்த ஒரு கருவேல மரமும் இருந்தது..! இப்போது  முள் கம்பிகள் எதும் இல்லை வெறும் நாலடிகருங்கல் மட்டும் 15,16 எண்ணிக்கையில் இருந்தது..!


இடத்தை விற்று  கிட்ட தட்ட முழுபணமும் வாங்கியாயிற்று... கொஞ்சம் மட்டும் மீதி...!  இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் அளக்க ஆள் வரும்போது வர சொல்லி இருந்தார்கள்..!

போனேன்..!
 இடத்தை பார்த்தால் நிறைய மாறுபாடு தெரிந்தது..! சுற்றி இருந்த கருங்கற்களை காணவில்லை ..!அந்த கருவேலமரம் தரையோடு வெட்ட பட்டு கிடந்தது..! 

ஏன் மரத்த  வெட்டுனாங்க.. கருங்கல்  எல்லாம்  எங்கே..?  நான் கேட்க ..? 
ஆனந்தன் விளக்கினான் ..! நாம இடத்த  வித்தது ஒரு புரோக்கர் கிட்ட அவர் வேற ஆள் கிட்ட விக்கிறதுக்கு முன்னாடி இந்த இடத்துல என்ன என்ன எல்லாம் தேறுதோ  அதை எல்லாம் எடுத்துகிட்டாரு..!

சரி இந்த மரம் என்னத்துக்கு ஆக போகுது.. அதை ஏன் வெட்டினாங்க..?

ஏனா..? விறகுக்கு ஆனால் கூட லாபம்தானே..?

என்னது  விறகுக்கா..!

அளந்து முடித்தார்கள் ...!

கிளம்பும் போது ..!  இடத்தில்  ஒரு மூலையில்  இத்தனை நிழலாய் நின்றிருந்த கருவேல மரம் வெட்ட பட்டு பிணமாய் கிடந்த போதுதான் மனதில் ஒரு முள்..!! 
இடத்தை விற்காமல் இருந்திருக்கலாமோ..!


>

மதிப்பிற்குரிய பெண்மணிகள் (பகத் சிங்கின் தாயார்)



அன்னை வித்யாவதி


என்னை வியக்கவைத்த, பெண்களில் ஒருவர் பகத் சிங்கின் தாயார் .
ஏன் ? சொல்லுகிறேன் கேளுங்கள் ஆங்கிலேயர்களின் சட்ட சபையில் வெடிகுண்டு வீசிய குற்றத்திற்காக பகத் சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கிறது ஆங்கில அரசு !!!
தண்டனையை ஏற்று கொண்ட பகத் சிங் சிறைச்சாலையில் ,ஆங்கில சிறை அதிகாரிகளிடம் சற்றும் வளைந்து கொடுக்காமல் வீரத்துடனும் ,இறுமாப்புடனும் நடந்து கொள்கிறான் .
பகத் சிங்கை எப்படியும் வழிக்கு கொண்டுவர நினைத்து ,பகத் சிங்கிடம் நீ , மன்னிப்பு கேள் ! உன் மரண தண்டனையை ரத்து செய்கிறோம் என சொல்லுகிறது ஆங்கில அரசு !!

அதற்கு பகத்சிங் , உங்களிடம் மன்னிப்பு கேட்டு உயிர் வாழ்வதை விட ,மரணம் அடைவதயே விரும்புகிறேன் என்று சொல்ல ,ஆங்கில அரசுக்கு மகா எரிச்சல் !!
உடனே ,ஆங்கில அரசு அதிகாரிகள் , பகத் சிங்கின் தாயாரிடம் சென்று உன் மகனை மன்னிப்பு கேட்க சொல் அவன் மரண தண்டனையை ரத்து செய்கிறோம் என கேட்கிறார்கள் .

ஒரு மகன் உயிர் வாழ்வதில் எந்த தாய்க்குத்தான் விருப்பம் இருக்காது ?

ஆனால் ?
ஒரு மாவீரனை பெற்றெடுத்த வீரத்தாய் அல்லவா அவள் !

” மன்னிப்புகேட்டு என் மகன்உயிர் வாழ்வதைவிட மரணம் அடையட்டும்”

என்று கூறி விடுகிறாள்

கோபத்தின் உச்சிக்கு சென்ற அதிகாரிகள் ,சரி அவன் மன்னிப்பு கேட்க வேண்டாம்
நீ மன்னிப்புகேள் , அவனை விடுதலை செய்கிறோம் என கேட்க !

அதற்கும் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை அந்த வீரத்தாய் !!

மன்னிப்பு கேட்க மறுத்து விடுகிறாள் !!!

தூக்குமேடைக்கு அழைத்து செல்ல படுகிறான் பகத்சிங் ,தூக்கில் போடுவதற்க்காக பகத் சிங் முகத்தை கருப்பு துணியால் மூட முற்படுகிறார்கள் உடனே ,பத்சிங் நான் மரணமடையும் போதும் என் இந்தியாவை பார்த்துக்கொண்டே சாக விரும்புகிறேன் என் முகத்தை மூட வேண்டாம் என கேட்டு கொள்கிறான் ……….

மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது …. அவன் சொந்த ஊருக்கு அவனுடைய அஸ்தி கொண்டுவர படுகிறது .துக்க வெள்ளத்தில் இருந்த அந்த கிராம தாய்மார்கள் பகத்சிங்கின் அஸ்தியை எடுத்து தங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என பகத்சிங்கின் அஸ்தியை தங்கள் வயிற்றில் பூசி கொண்டார்களாம் ..

( பிள்ளைஎன்று பிறந்தால் பகத்சிங்கின் தாய் போல ஒருதாய்க்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும் .இல்லைஎன்றால் அவன் அஸ்தியை வயிற்றில் பூசி கொண்டார்களே அந்த தாய்மார்களுக்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும் )


>

ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான ஹாரன் வேண்டும் ..!!



சமீபத்தில் சென்னை புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுஇருந்தேன். அகலமான நெடுஞ்சாலை. பின் பக்கத்தில் இருந்து ஒரு வாகனம் வருவதற்கான ஹாரன் கேட்கவே சைடு மிரரில் பார்த்தேன் ஒரு லாரி வந்து கொண்டுஇருந்தது சாலையின் நடுப்பகுதியில் இருந்து ஓரத்திற்கு சென்றேன்.லாரி கடந்து செல்ல எடுத்துகொள்ளும் நேரம் அதன் வேகத்தை பொறுத்து தோராயமாக கணக்கிட முடியும். அதன் படி மீண்டும் சாலையின் நடுப்பகுதிக்கு வர எத்தணிக்கையில் லாரியானது நீண்டுகொண்டே சென்றது.அது சாதாரணலாரி அல்ல கண்டெயினர்களை ஏற்றி செல்லும் அதிக சக்கரங்கள் பொருந்திய நீளமான லாரி.ஆனால் சைடு மிர்ரரில் பார்க்கும்போது சாதாரண லாரி போலவே தோன்றியது.உடனே சுதாரித்து கொண்டேன் . அதேபோல நீளம் அதிகம் கொண்ட பேருந்தும் குழப்பம் ஏற்படுத்துகின்றது .


முன்பு ஒரு சமயம் எங்கள் ஊரில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த போது ஹாரன் ஒலி கேட்கவே சைடு மிர்ரரில் பார்த்தால் முகப்பு விளக்கு அமைப்பு ஒரு காரை போன்று தோன்றியது . அது அகலமில்லாத சாலை . கார்தானே என்று சாலையை விட்டு இறங்காமல் சாலை ஓரத்தில் சென்றேன் . ஆனால் .! என்னை கடந்து சென்றது ஒரு பேருந்து ..! தடுமாறி போனேன் .அதாவது ஊரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து அது . உள்ளூர் பேருந்தாக இருந்தால் பேருந்து முழுவதும் வெளிச்சமாக இருக்கும் சைடு மிர்ரரில் தெரிந்து விடும் . ஆனால் விளக்குகள் அணைக்க பட்ட பேருந்தை சைடு மிர்ரரில் கண்டுகொள்ள முடியவில்லை .



வாகன ஒலி அமைப்பில் திருத்தம் வேண்டும் ..!

இருசக்கர வாகனம் ,முன்று சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம் ,ஆறு சக்கர வாகனம் , பதினாறு சக்கர வாகனம் அதைவிட பெரிய வாகனம் என ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரே மாதிரியான ஹாரன் அமைக்க பட வேண்டும் .ஒரு வாகன ஹாரனை வைத்தே அது எந்த மாதிரியான வாகனம் என அறிந்து கொள்ளும் வகையில் ஒலி அமைக்க பட்டால் வாகன ஓட்டிகளுக்கு விபத்தினை தவிர்க்க ஏதுவாக இருக்கும். வித விதமான அலறல் சத்தம் கொண்ட ஒலி அமைப்புகளும் தடை செய்ய பட வேண்டும் .


.

>