அதிமுக மைனஸ் மதிமுக = அம்மா கோயிங் டு கொடநாடு..? வாக்கு சதவீதம் ஒரு அலசல்...!

என்னதான் ஊழல் குற்றசாட்டு அல்லது சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டாலும் அந்தந்த கட்சிகளுக்கென ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ளது .இதுவரை அந்த கட்சிக்குரிய வாக்குகள் சிதறியது இல்லை இது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட வரலாறு.!

திமுக -அதிமுக கூட்டணி கட்சிகளின் தோராய வாக்கு சதவீதம்

திமுக கூட்டணி

திமுக 30%--32%

காங்கிரஸ் 7%--10%

பாமக 4%--5%

விடுதலை சிறுத்தை 1.5%--2%

மற்றவர்

கொமுக

முஸ்லீம் லீக்

வாண்டையார் கட்சி

பெமக அனைத்தும் சேர்த்து 3%-4%

ஆக திமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45.5%--53%

அதிமுக கூட்டணி

அதிமுக 30%--32%

தேமுதிக 8%--10%

இ.கம் 1%---2%

மா.கம் 1%--2%

மற்றவர்

மமக

சமக

புத

மூமுக

பார்வர்டு பிளாக்

குடியரசு கட்சி அனைத்தும் சேர்த்து 5%--6%

ஆக அதிமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45%--52%

இரு கூட்டணிகளும் கிட்ட தட்ட சம பலத்துடன் இருக்க

மதிமுக ஓட்டுகள் தான் இங்கே ஆட்சியை நிர்ணயிக்கும்

மதிமுக ஓட்டு சதவீதம் 3.54.5%

அதிமுக மேல் வெறுப்பில் இருக்கும் மதிமுக வாக்காளர்கள் திமுக விற்க்கு வாக்களிக்கும் பட்சத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பல இடங்களில் திமுக வெல்லும்.

மதிமுக வை புறக்கணித்ததால் வாய்ப்பை இழக்கிறார் அம்மா...???



>

மதிமுகவின் வாக்குகள் யாருக்கு ...? தொண்டனின் பார்வையில் ..!


திமுக ஆட்சி அகற்றபட வேண்டும்...! காங்கிரஸை துரத்த வேண்டும்...! என்ற எண்ணங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது இப்போதைய அதிமுக எதிர்ப்பு.

மதிமுக தொண்டனின் முதல் எதிரியாக இருப்பவர் இப்போது ஜெயலலிதாதான்.!
அப்படியானால் மதிமுகவின் மொத்த ஓட்டும் திமுக அணிக்கு செல்லுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..!

மதிமுக தொண்டனை பொறுத்தவரையில் அதிமுக தான் எதிரி..! அதிமுகவின் கூட்டணி கட்சிகள் அல்ல..!

மதிமுக ஓட்டுக்கள் எங்கு ..எப்படியெல்லாம் பிரியும்..!

திமுக - அதிமுக நேரடியாக மோதும் இடங்களில்..!

இங்கே நிச்சயமாக மதிமுக ஓட்டுகள் திமுகவிற்குதான்..! வரிப்புலி வரிசையை கலைஞர் அழைக்க வேண்டிய அவசியமே இல்லை...!

திமுக- தேமுதிக மோதும் இடங்களில்

இங்கே முழுமையாக திமுக விற்கு மதிமுக ஓட்டுகள் விழாது கணிசமான அளவில் தேமுதிகவிற்க்கும் மதிமுக ஓட்டுகள் பிரியும். கம்யூனிஸ்டுகள் மோதும் இடங்களிலும் இதே நிலைதான்.

பாட்டாளி மக்கள் கட்சி- அதிமுக மோதும் இடங்களில்

இங்கே மதிமுக ஓட்டுகள் பாமக விற்க்கு கிடைக்கும்.தேமுதிக போட்டியிடும் இடங்களில் அவர்களுக்கும் பிரியும்.

அதிமுக - காங்கிரஸ் மோதும் இடங்களில்..!

மதிமுக அதிமுக வை எதிர்த்தாலும் இந்த இடங்களில் மதிமுக ஓட்டுகள் காங்கிரஸுக்கு கிடைக்காது. இந்த இடங்களில் மதிமுக ஓட்டுகள் அதிக அளவில் பிஜேபிக்கு கிடைக்கும்.

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளில் மதிமுக ஓட்டுகள் திருமாவுக்குதான்.


மொத்ததில் மதிமுக ஓட்டுகள் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக தவிர தேமுதிக விற்கு அதிக அளவிலும்,மற்ற கட்சிகளுக்கு ஓரளவிற்க்கும் பிரியும்.

>

வைகோ ...!!!!!!





அரசியலில் யாரும் சரியானவர்கள் இல்லை என குறைபட்டு கொள்வோம் அதே சமயம் சிறப்பாக செயல்படகூடிய ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்கள் இருந்தால் அவர்களை கண்டுகொள்ளவும் மாட்டோம். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். இப்போது முன்னே தெரிவது வைகோ...!

இவரை பற்றி பொதுவானவர்களின் அபிப்ராயங்கள் என்ன..?

சிறந்த பேச்சாளர்

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல் பட கூடியவர்

உலக வரலாறு அறிந்தவர்

போராட்ட குணம் கொண்டவர்

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களிடமும் நன் மதிப்பு பெற்றவர்

சிறந்த இலக்கியவாதி

விளையாட்டு வீரர்

இன்னும் பல விஷயங்கள் சொல்லலாம்.


இவரை குறை சொல்லுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

மாறி மாறி வைத்து கொண்ட அரசியல் கூட்டணிகள்...! இதுதான் அவர்மீது சொல்ல படுகிற முக்கிய குற்றசாட்டு...! இன்றய அரசியல் சூழ் நிலையில்
கூட்டணி மாறுதல் ஒரு விஷயமே அல்ல...!

ஒரு கால கட்டத்தில் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றி அமைக்க போகிறவர் என எதிர்பார்க்கபட்டவர். சென்ற இடமெங்கிலும் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார். ஆற்றலும்,திறமையும்,துடிப்பும் மிக்க ஒரு அரசியல் தலைவர் ஏன் இன்னும் அவருக்குண்டான இடத்தை அடையவில்லை...? ஆரம்ப காலத்தில் அவருக்கு இருந்த ஆதரவு தற்போது குறைந்து இருப்பதற்க்கு காரணம் என்ன..?

வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றபட்ட போது தமிழகத்தில் அப்போது அதிமுக ஆட்சி..! அப்போது அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் இருந்தார்கள்..!


வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றபட்ட போது அவர் பின்னால் அணி வகுத்த மக்கள் கூட்டத்தை மூன்று விதமாக பிரிக்கலாம்..!

1. அதிமுக ஆட்சியின் மீது வெறுப்பில் இருந்தவர்கள் ஜெயலலிதாவை வீழ்த்த வந்த சக்தியாக வைகோவை பார்த்து அவர் பின் அணி திரண்டனர்.

2. திமுகவை பிடிக்காதவர்கள், திமுவில் இருந்து விலகி வந்தவர்கள் ஒரு கணிசமான அளவில் திரண்டனர் .

3. இந்த மூன்றாமானவர்கள் மிக முக்கியமானவர்கள்..! வைகோவின் ஆற்றலையும் திறமையையும் கண்டு இவர்தான் தலைவர் ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெருமளவில் இளைஞர்கள் அவர் பின்னால் அணி வகுத்தனர்.

மதிமுக ஆரம்பிக்க பட்டு முதன் முதலில் சந்தித்த தேர்தல், மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை யில் நடந்த இடைதேர்தல்..! மயிலாப்பூரில் பத்தாயிரத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றாலும் பெருந்துறையில் மதிமுகவிற்க்கு இரண்டாம் இடம் கிடைக்கவே...! பெரும் உற்சாகம் அடைந்தனர் மதிமுகவினர்.

அதன் பிறகு மதிமுக எந்த ஒரு தேர்தலையும் தனக்கு சாதகமான சூழ்நிலையில்
சந்திக்கவே இல்லை.

அடுத்து வந்த பொது தேர்தலில் தனித்து களம் கண்டது மதிமுக. அப்போது இருந்த அதிமுக எதிர்ப்பு , மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்,ரஜினி ’’குரல்’’
என ஒரு பெரும் அலையில் மதிமுக எடுபடவில்லை. ஆனால்..! அந்த கடுமையான சூழ்நிலையிலும் கிட்ட தட்ட இருபது லட்சம் ஓட்டுகள் பெற்றது மதிமுக.

காலபோக்கில் பாராளுமன்றதேர்தலில் வைகோ ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்கிறார். வைகோ வுடன் இருந்த அதிமுக எதிர்ப்பாளர்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தை அளிக்கவே ..! வைகோ வுடன் இருந்த அதிமுக எதிர்ப்பாளர்கள் அவரைவிட்டு பிரிந்தனர்.

மீண்டும் ஒரு சூழ்நிலையில் வைகோ திமுகவுடன் கூட்டு சேர்கிறார் . இப்போதும் பலர் அதிருப்தி அடைந்து விலகுகிறார்கள்.

ஆனால்..! வைகோவை தன் தலைவராக எண்ணி அவரிடம் சேர்ந்த பெருமளவிலான இளைஞர் கூட்டம் ஒருபோதும் அவரை விட்டு விலகவில்லை.
இந்த கூட்டத்தை கொண்டே வைகோ அரசியலில் பெரும் வெற்றியை அடைய முடியும்.

ஆனால்..! இவர்களுக்கும் வந்தது சோதனை ..! ஆட்சி யில் இருந்த ஆளும் வர்கத்தினர் மதிமுகவை சிதைக்கும் பணியில் முழுமூச்சுடன் இறங்கினர். தேன் கூட்டில் ராணிதேனியை தேடி நசுக்குவதுபோல் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து போட்டனர். எந்த ஒரு போராளிக்கும் மனதில் ஒரு சமாதான இடைவெளி உண்டு அந்த இடைவெளியில் மிக சாதுர்யமாக தங்களை சொருகி கொண்டனர் ஆளும் வர்கத்தினர்.

இதற்கு ஒரு உதாரணம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் சக்தியாக விளங்கியது மதிமுக..! ஆனால் இப்போதுஅங்கே மதிமுக தலைகள் யாரும் இல்லை .. ! எல்லோரும் திமுகவில் ஐக்கியம்..! கட்சி மாறியவர்களை குறை சொல்லி பயன் இல்லை நடைமுறை அரசியல் சூழ்நிலையில் தவிர்க்க முடியாமல் நிர்பந்தத்திர்க்கு உட்பட்டு கட்சி மாறிவிட்டார்கள்.

ஆனால்..! வைகோவை மனதில் வைத்துள்ள தொண்டர்கள் இன்றுவரை அவருடன்தான் உள்ளனர். இவர்கள் உறுதியானவர்கள். இன்றளவில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் வைகோவை தலைவராக எண்ணி,செயல்பட ஆற்றல் மற்றும் ஆர்வம் இருந்தும் தங்களை வழி நடத்த சிறு தலைவர்கள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் ஏராளம்..!

மதிமுகவிற்கு ஏற்பட்ட அதே நிலை சில மாதங்கள் விஜயகாந்தின் தேமுதிக விற்கும் ஏற்பட்டது . சிறுசிறு தலைவர்கள் எல்லோரும் நிர்பந்திக்க பட்டார்கள்
சிலர் கட்சி மாறிபோனார்கள்.சிலர் ஒதுங்கினார்கள்.நன்கு செயல் பட்டு வளர்ந்து வந்த தேதிமுக பல இடங்களில் தொய்ந்து போனது..! ஆனால்...! சட்டென சுதாரித்த விஜய காந்த் புதிய நிர்வாகிகளை நியமித்து தொய்வை போக்கினார்..!
இந்த இடத்தில் வைகோ இதேபோல செயல் பட்டு இருந்தால் இப்போது மேலும் வலிமையுடன் மதிமுக இருந்திருக்கும்.

பிறகட்சிகளும்...! மதிமுகவும்...!
திமுக
முதல் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று ..! அனைத்து சிறிய ஊர்களிளும் கிளைகள் உண்டு.! அசைக்க முடியாத தொண்டர்கள் பலம்...! குடும்ப அரசியல் இதன் பலவீனம்..!
அதிமுக
திமுகவிற்க்கு சளைத்தது அல்ல..! அனைத்து சிறிய ஊர்களிலும் கிளைகள் உண்டு.! உணர்சி வசபட்ட தொண்டர்கள் அதிகம்..! தடாலடியாக நிர்வாகிகளை மாற்றுவது பலவீனம்.
பாமக
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கிளைகள்.! வன்னியர்கள் மட்டும் தொண்டர்கள்..!
காங்கிரஸ்
தொண்டர்களை விட தலைவர்களே அதிகம் ..! எல்லா ஊர்களிலும் கிளைகள் கிடையாது..! இவர்கள் தனித்து ஒரு தேர்தலையாவது சந்திக்க வேண்டும் அப்போதுதான் இவர்கள் பலம் நமக்கு தெரியும்..! அவர்களுக்கும் புரியும்..!
விடுதலை சிறுத்தைகள்
இவர்கள் கருத்துகள் பொதுவானதாக இருந்தாலும் . தலித் கட்சியாக காட்டிகொண்டு ஒரு மினிமம் கியாரண்டி அடைந்து உள்ளனர். எல்லா ஊர்களிலும் கிளைகள் கிடையாது.

கம்யூனிஸ்ட்
பெரும் பலம் இல்லாவிடாலும் கட்சியினர் உறுதியானவர்கள். எல்லா ஊர்களிலும் கிளைகள் இல்லை..!
தேமுதிக
விஜயகாந்தின் சினிமா கவர்ச்சியில் துவங்கி சராசரி கட்சியாக வளருகிறது.!
கிட்ட தட்ட எல்லா ஊர்களிலும் கிளைகள் உண்டு..! இவர்கள் எதிர்காலத்தை குறைத்து மதிப்பிட முடியாது..!

மதிமுக

திமுக, அதிமுகவிற்க்கு அடுத்த படியாக அனைத்து சிறிய ஊர்களிளும் கிளைகள் உண்டு. மிக சிறிய கிராமத்திலும் மதிமுக ஆட்கள் உண்டு. வலிமையான கட்சி கட்டமைப்பு இதன் பலம். எதிராளிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்காதது இதன் பலவீனம்.
.........................................................................................

இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் வைகோவை போன்ற ஆற்றல் படைத்த தலைவர் யாரும் இல்லை என நிச்சயமாய் சொல்ல முடியும். அவர் தமிழக அரசியலில் ஒரு சிறப்பான இடத்திற்க்கு இன்னும் வராமல் இருப்பது வைகோவின் துரதிஷ்ட்டம் அல்ல தமிழ் மக்களின் துரதிஷ்ட்டம்...!


இறுதியாக ஒன்று..!

வைகோவிடம் இருந்து நிர்பந்தம் காரணமாக பிரிந்து வேறுகட்சிகளில் இருந்தாலும் (செஞ்சி,எல்.கணேசன் போன்றவர் அல்ல) அவர்கள் மனதில் வைகோ ஒருவரே தலைவராக இருக்கிறார் . அவர்களை வைகோ மீட்க வேண்டும் அது வைகோவால் முடியும்..! வைகோவால் மட்டுமே முடியும். திமுகவின் குடும்ப அரசியலும், வரும் பொதுதேர்தல் முடிவுகளும் மதிமுகவை எதிர்காலத்தில் வலிமை மிக்க சக்தியாய் மாற்றி அமைக்கும்...!



மீள்பதிவு



>

ஆணாதிக்கமும்...! பெண்ணடிமைத்தனமும் ..!

ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் பற்றி ஊடகங்களில் அறியப்படும் போது நினைத்து கொள்வேன் இப்படியெல்லாம் நடக்குது போல அப்படின்னு.ஆனால் உண்மையில் அவ்வாறு பேசுகிறவர்கள் ரொம்பவும் மிகை படுத்தி சொல்லுகிறார்களோ என்று. இப்போது தோன்றுகிறது. (இப்போது =கல்யாணத்துக்கு பிறகு)


ஒரு பெண்ணை எந்த ஆண் அடிமை படுத்த முடியும்? ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்கள் யார்? யார்? தகப்பன், சகோதரன்,கணவன்,மகன் இந்த நான்கு ஆண்களில் எந்த நிலையில் இருக்கும் ஆண் ஒரு பெண்ணை அடிமை படுத்துகிறான்.

தகப்பன்
எந்த ஒரு பெண்ணும் என் அப்பா ஒரு ஆண்! அதனால் தன் ஆணாதிக்க புத்தியை என் மீது காட்டி அடக்குகிறார் அல்லது, கொடுமை படுத்து கிறார் என சொல்லுவார்கள் என நினைக்க முடியவில்லை.எனவே அப்பாவை விட்டுடுவோம்.

சகோதரன்

பெரும்பாலும் பெண்கள் தன் அண்ணன் தம்பிகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் தான். இருந்தாலும், சில,பல இடங்களில் சச்சரவுகள் ஏற்படுகிறது.ஒரு சகோதரன் தன் சகோதரியை கண்டிக்கும் போது இருவருக்கும் சிறு சல சலப்பு ஏற்படுகிறது. உதரணமாக சகோதரியின் உடை விஷயங்கள் ,வெளியே செல்லும் விசயங்களில் சகோதரன் கண்டிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இங்கே சகோதரிகள் ஒன்றை புரிந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். பெண்கள் பேசும் ஒரு வசனம் உண்டு அதாவது ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று. எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியுமோ அதேபோல ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்.


சில வகை உடைகள் அணிந்து செல்லும் போதோ,அல்லது தனியே வெளியில் செல்லும் போதோ? அந்த சகோதரியின் மீது மற்றவர்கள் பார்வை எப்படி விழும் என்பது அந்த சகோதரனுக்கு நன்றாக புரியும்! அதை அவனால் அவன் சகோதரியிடம் வெளிப்படியாக சொல்லி விளக்க முடியாது.அதை சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.அந்த நேரத்தில் அந்த சகோதரன் கோபத்தை வெளிப்படுத்தினால் அது அன்பாலும்,அக்கறையாலும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்! அதோடு வீட்டுக்கு தெரியாமல் காதலிக்கும் பெண்களுக்கு சகோதரர்கள் முதல் எதிரியாக தோன்றுகிறார்கள்.

ஒரு சகோதரன் தன் சகோதரிக்கு கணவனாக வருகிறவன், தன்னை விட அறிவிலும் அந்தஸ்திலும், திறமையிலும் ,வசதியிலும் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறான். அதே சமயம் ஒரு சகோதரி தன் சகோதரனுக்கு பெண் பார்க்கும் போது வருகின்ற பெண் தன்னிடம் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருப்பதாக சிலர் சொல்லுகிறார்கள் . (சிலர் சொல்லுகிறார்கள் -எஸ்கேப்பு ).

ஒரு சகோதரன் சகோதரி மீது அதிகாரம் செலுத்தினால் அது அந்த சகோதரி மீது கொண்ட அக்கறையால்தான்.

கணவன்

ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் இந்த பிரச்சினையின் வேர் இங்கே தான் இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது.ஆனால் நன்கு புரிந்து கொண்டு, விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுபவர்களிடம் எந்த பிரச்சனையும் தோன்றுவதில்லை. மேலும் திருமணமான புதிதில் இருக்கும் அந்த ஆணாதிக்க பிரச்னை நாளாக நாளாக வீரியம் குறையும் என்பது என் நம்பிக்கை.

கணவன் மனைவி சண்டையில் விட்டு கொடுப்பவரே புத்திசாலி ஆகிறார்.இப்படி விட்டு கொடுத்து போகும் போது ஆணாதிக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இவர்கள் சண்டையில் விட்டு கொடுப்பவர் புத்திசாலி ஆகிறார் விட்டு கொடுக்காதவர் முட்டாளாகி போகிறார். நான் பலதடவை தங்க மணியிடம் சண்டை வரும்போது டென்சனாகி,கோவத்தின் உச்சிக்கு சென்று,கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் இதற்குமேல் பொறுத்து கொள்ள கூடாது இதற்க்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் பல தடவை அடங்கி போய் இருக்கிறேன்.இப்போது எனக்கு புத்தி சாலி ஆகிவிட்டோம் என்ற நினைப்பு! அதேபோல பல தடவை தங்க மணியும் புத்திசாலி ஆகி இருக்கு! அப்போதெல்லாம் நான் முட்டாளாகி இருக்கிறேன்.

பெரும்பாலும் ஆணாதிக்க பிரச்சனையில் விவாதிப்போர் குடித்து விட்டு மனைவியை அடிப்பவர்களை பற்றியே அதிகம் பேசுகிறார்கள், மனைவி மட்டும் தான் அடி வாங்குகிறார்களா? புருஷன் மப்புல இருக்கான் இப்போ அடிச்சா ஒன்னும் தெரியாது அப்படின்னு மப்புல வைச்சு மொக்குற தங்க மணிகளும் உண்டு !

காலைல முழிச்சு முதுக வலிக்குது நேத்து என்னை அடிச்சியான்னு அப்பாவியா கேக்கும் ரங்க மணிகள் எவ்ளோ பேர் ? (சொந்த அனுபவம் ஏதும் இல்ல)

நான் என் புருசன தெய்வமா மதிக்கிறேன்,அவர் மேல உசிரையே வைச்சு இருக்கேன் அதனால நான் விட்டு கொடுத்து அவர முட்டாளாக்க விரும்பல அப்படின்னும், என் பொண்டாட்டிதான் எனக்கு எல்லாமே அவ இல்லாட்டி நான் இல்ல அதனால நான் விட்டு கொடுத்து என் பொண்டாட்டிய முட்டாளாக்க விரும்பலன்னும் சொல்லி கமென்ட் போட வேணாம்னு என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளை அன்போடும்,பாசத்தோடும் பணிவோடும் கேட்டு கொள்கிறேன்.


மகன்

எந்த பெண்ணும் தன் மகனை இவன் ஆணாதிக்க கர்வம் பிடிச்சவன் என்று எப்போதும் சொல்ல போவது இல்லை அதனால் இதை பற்றி ஒன்றும் சொல்ல தேவை இல்லை.

பொதுவானவை

தகப்பன்,சகோதரன்,கணவன்,மகன் இவர்களை தவிர வேறு யாரேனும் ஒரு பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்திவிட முடியுமா? அப்படி நடந்தால் அதை பார்த்து கொண்டு இவர்கள் சும்மா இருந்து விடுவார்களா?

பணிக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு ஆணாதிக்க பிரச்னை இருப்பதாக சொல்ல படுகிறது. இதை வீட்டில் சொல்ல முடியாமல் இருக்கலாம் இந்த பிரச்சனையை பெண்கள் தைரியத்துடனும்,லாவகத்துடனும் எதிர் கொள்ள வேண்டும் . ஒருவன் தான் பதவியில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மற்றவர்களிடம் அதிகாரம் செலுத்தினால் அவன் நிஜத்தில் ஒரு கோழை யாகத்தான் இருப்பான்!

மேலும்,

எங்கள் நாட்டு பெண்கள் கலாச்சாரத்திலும்,கண்ணியத்திலும்,பண்பாட்டிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் இங்கே எல்லோருக்குமே உண்டு.அதன் பொருட்டு சில நவ நாகரிக
நங்கைகளின் உடை ,மற்றும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் போது அதை
ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என திரித்து கூறப்படுவதாக தோன்றுகிறது.



நான் என் தாயை தாயாகத்தான் பார்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் சகோதரியை சகோதரியாகத்தான் பார்க்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் மனைவியை மனைவியாகத்தான் பார்க்கிறேன்!ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் மகள்களை மகள்களாக தான் பார்க்கிறேன்! பெண்களாக பார்க்கவில்லை!



பெண்களும் அவ்வாறே இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை!

தன் உறவுகள் அல்லாது வேறு இடங்களில் ஒரு பெண் மீது யாராவது ஆதிக்கம் செலுத்த முற்பட்டால்? அவர் அதை தன் உறவுகளில் துணை கொண்டோ ? அல்லது தனித்தோ ?வைர நெஞ்சுடனும்,உறுதி கொண்ட உள்ளத்துடனும் எதிர்த்து போராட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் ஆணாதிக்கம் என்ற சொல்லே இல்லாமல் போய் விடும்.


------------------------------------------------------------------------------------

மீள் பதிவு



>