என்கவுண்டர் எதிர்ப்பாளர்களே...!இவனை நினைவிருக்கிறதா ..?


2005-2006 களில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் டெல்லி அருகே உள்ள நொய்டாவின் நிதாரி கிராமத்தை சேர்ந்த தொழில் அதிபர் மொனிந்தர் சிங்கும் அவனது உதவியாளன் சுரேந்திர கோலி இருவரும் சேர்ந்து ஒரு இளம்பெண் மற்றும் 19 பள்ளி சிறுமிகளை கடத்தி பாலியல் வன்முறை செய்து கொலை செய்து வீட்டின் பின்புறம் உள்ள சாக்கடையில் வீசினர் . சாக்கடையில் இருந்து குவியல் குவியலாக எலும்பு கூடுகள் கண்டெடுக்க பட்டன.


நாட்டையே குலுக்கிய சம்பவம் இது இந்த வழக்கில் சுரேந்திர கோலி க்கு மரணதண்டனை விதிக்க பட்டது ஆனால் ..? அந்த மொனிந்தர் சிங்கை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது அலகபாத் உயர்நீதி மன்றம்.



இந்த மொனிந்தர் சிங் ஒரு கொடும் கொலை குற்றவாளி என்பது ஊரறிந்த ரகசியம். நமது சட்டமும் அதன் நடைமுறைகளும் தரும் சலுகையில் இந்த கொடூர கொலைகாரர்கள் சர்வ சுதந்திரமாய் சட்டத்தின் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இன்னும் பல வருடங்களுக்கு எந்த வித சேதாரமும் இல்லாமல் இவர்களால் பாதுகாப்பாய் வாழ்ந்திட நமது நீதித்துறை
ஏராளமான ஓட்டைகளை வைத்திருக்கிறது. இதுதான் நமது சட்டத்தின் சிறப்பு...

நீதி மன்றங்களைத் தாண்டினால் நாட்டின் நலனுக்காக தனது உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்து இருபத்தி நாலுமணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் நாட்டின் முதல் குடிமகனுக்கு கருணை மனுக் கொடுத்து விட்டு மேலும் பல வருடங்கள் தண்டனை ஏதுமில்லாமல் விசாரணை கைதி என்ற பெயரில் சுகவாழ்வு வாழலாம்.

யாருக்கோ நடக்கிறது,அதனால் எனக்கென்ன? என்கிற நம்முடைய மனப்போக்கில் மாறுதல் வராதவரையில் இந்த மாதிரி கயவர்களை எதுவும் செய்ய முடியாது. நாளைக்கே சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து இந்த மொனிந்தர்சிங் குற்ற்றமற்றவனாக அறிவிக்கப் பட்டு வெளி வரமாட்டான் என்பது என்ன நிச்சயம்..




நேற்று கோவையில் நடந்த என்கவுண்டரை எதிர்க்கும் அதிபுத்திசாலிகள் இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார்கள். வலிக்கு வலி,அதுவும் உடனுக்கு உடன் என்பதாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.

மோகன் ராஜை போட்டு தள்ளிய கோவை போலீசாருக்கு ராயல் சல்யுட்..!

>