சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் சன் டிவி

சன் டிவி யின் நிஜம் நிகழ்ச்சி சுற்றுலாதளங்களையும் அங்குள்ள ஆபத்துகளை பற்றியும் விளக்கி வருகிறது. ஆபத்துகளை பற்றி என்றால் ஆபத்து களை மட்டும் பெரிது படுத்தி பயமுறுத்துகிறது.





அந்தமான்

அந்தமானை பற்றி சொல்லும்போது எப்போதும் அங்கே நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டே இருப்பதாகவும் அங்கே சுற்றுலா சென்றால் அவ்வளவுதான் என்கிற ரீதியில் இருந்தது.

ஒகனேக்கல்

மரண அருவி என்றும், மாதம் மாதம் பலர் இங்கே மரணமடைகிறார்கள் என்றும் எதோ ஒரு சைத்தான் வாழும் இடம்போல ஒகனேக்கல் பற்றி சொல்லி இருந்தனர்.

ஒரு சுற்றுலா தளத்தின் ஆபத்துகளை பற்றி எடுத்து சொல்லுவது தவறில்லை.
ஆனால்..? அந்த இடத்திற்கே போக கூடாது என்பதுபோல சொல்லி பயமுறுத்துவது சரியா ...?

ஒரு நாட்டின் வருவாயில் சுற்றுலா தளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த சுற்றுலா தளத்தை நம்பி பலர் பிழைப்பு நடத்துகிறார்கள்.

செய்திகளை பரபரப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு சுற்றுலா தளத்தின் ஆபத்துகளை மட்டும் பெரிது படுத்தி அந்த இடத்துக்கே மக்களை போகவிடாமல் தடுக்கும் வகையில் செய்திகளை வழங்குவது சரியா ..? அந்த இடத்தை நம்பி பிழைப்பு நடத்துபவர்களை பற்றியும் ,அந்த பகுதியில் வாழும் மக்களின் மனநிலையை பற்றியும் யோசிக்க வேண்டாமா ..?

சன் டிவி செய்வது சரிதானா ...?

>

மழைச்சத்தத்தில் நனையலாம் வாங்க....!

மழைக்காலம் துவங்கியவுடனே மனம் குளிர தொடங்கும் மழையின் ரம்மியமும் மண் வாசனையும் மனதை மயக்கும்...!



மழையையும் அதன் ஓசையையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது மழை சிலருக்கு பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ..! சிலருக்கு கற்பனை குதிரையை தட்டிவிடும்..!


மழையில் நனைவதும் விளையாடுவதும் சிலருக்கு மிகவும் பிடிக்கும் ..!

வெய்யிலுக்கு குளிர்ச்சியாக முப்பது நிமிடம் இடைவிடாத ஒரு அருமையான மழையின் ஓசையை ....





நன்றி....!


.................................................
>

சோழ நாட்டு இளவரசன்

துயில் எழுந்து காலை கடன் முடித்து, நீராடல்..! இரண்டு தாதி பெண்கள் அழைத்து சென்று வெது வெதுப்பான வெந்நீரில் நீராட்டிவிட நீராடல் முடிந்து வெண் பட்டு உடுத்தி, முத்துமாலை,முதற்கொண்டு ஆபரணங்கள் அணிந்து, அறுசுவையுடன் கூடிய காலை உணவு.

அரசவை!

இளவரசர் வாழ்க!!! இளவரசர் வாழ்க!!!
என்ற ஜெய கோஷங்கள் முழங்க அரசவை விஜயம்!!

மக்களின் குறை கேட்டல், புலவர்கள்,பாடி பரிசில் பெற்றுச் செல்ல அவை கலைகிறது .!

நண்பகல்!

அரண்மனையின் மேல்தளம் !!





குளிர்ந்த வெயில்!! வயல் வெளியால் நெய்யப்பட்ட என் சோழ தேசம். நிறைந்த எங்கள் காவிரித்தாய்!!தூரத்தில் மக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் விவசாய பணிகளில்! ஆங்காங்கே குதிரை வீரர்கள்! இரண்டு வீரர்கள் புழுதியை கிளப்பியபடி குதிரையில் வேகமாக சென்றுகொண்டு இருக்க! மன நிறைவுடன் என் தேசத்தை ரசிக்கின்றேன் !!







போரடிக்கும் வேலைக்கு சேர நாட்டில் இருந்து பதினைந்து யானைகள் வாங்க பட்டு உள்ளன.அவை இன்னும் வந்து சேரவில்லை இன்னும் இரண்டு தினங்களில் அவை வந்துவிடும் அவற்றை பழக்க கூடவே பாகன்களும் வருகிறார்கள்.




கீழே இறங்கி வருகிறேன்! இரண்டு தாதியர், இளவரசருக்கு பெண் தேட துவங்கியது முதல் நம் இளவரசர் முகத்தில் தனி களை வந்துவிட்டது
என கிசு கிசு வென பேச மனதில் உற்சாகம் பிறக்கிறது.




மதிய உணவு

மெல்லிய போதை தரும் சுவையான பானம்! அறுசுவை உணவு முடித்து உறங்க செல்கிறேன். தாதியர் கவரி வீச ஆழ்ந்த உறக்கம்..



v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v



ஏங்க! எந்திரிங்க!!! சனி கிழமை ஆனா! ஓவரா சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்றமணிவரைக்கும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,ஞாயித்துகிழமை பன்னெண்டு மணிவரைக்கும் தூங்க வேண்டியது? எந்திரிங்க இந்தாங்க காப்பி குடிங்க!!



என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன் என்னை எழுப்ப ( அதான் கனவு முடிஞ்சு போச்சுல்ல அப்புறம் என்ன இலக்கண தமிழு ) ஆமா! நைட் கொஞ்சம் ஓவர்தான்!!!





..
>

கடன் தொல்லை நீங்கிட ..!



கடன் தொல்லை நீங்க...! கொடுத்த கடனை திரும்ப பெற..! நம்ம டவுசர் பாண்டி அவர்களின் அருமையான பதிவு இங்கே..!



கடன் தொல்லை நீங்க ஒரு அரிய்ய்ய்ய வாய்ப்பு



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
>

அப்பா குருவி

ஒரு ஊருல ஒரு குருவி இருந்துச்சாம் அந்த குருவிக்கு பெரியவங்க கல்யாணம் பண்ணி வைச்சாங்களாம். ஜோடி குருவி வந்ததும் இந்த குருவி ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம் கொஞ்ச நாள்ல இந்த குருவிங்களுக்கு குழந்தைகளா மூணு குஞ்சுகள் பொறந்தது. எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க...



ஆனா..! இவங்களுக்கு நல்ல கூடு இல்லையாம் ழை காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டாங்க அதனால அப்பா குருவி நல்ல கூடு கட்டணும்னு நினைச்சு நெறைய குச்சிகள்,நார்கள் எல்லாம் தேடிச்சாம் ஆனா அந்த ஊருல நல்ல குச்சி ,நார் ஏதும் கிடைக்கல . அப்போ அங்க இருக்குற சில குருவிகள் சொன்னது கடல் கடந்து பறந்து போய் தேடினா நெறைய குச்சிகளும் நார்களும் கிடைக்கும் நல்ல கூடா கட்டிக்கலாம் அப்படின்னு.

ஒடனே இந்த அப்பா குருவியும் தன்னோ ஜோடி குருவி ,குஞ்சுகளைஎல்லாம் விட்டுட்டு டல் கடந்து போச்சாம்.




கடல் கடந்து போய் வெய்யில்லயும் ,மழைலயும் அலைஞ்சு திரிஞ்சு நெறைய குசிகளையும் நார்களையும் எடுத்து வந்து கொஞ்ச கொஞ்சமா கூடு கட்டிச்சாம்.கடல் கடந்து போனதுல நெறைய இரையும் கிடைச்சதாம் அதயெல்லாம் கொண்டுவந்து தன்னோட ஜோடி குருவிக்கும்,புள்ளைங்களுக்கும் கொடுத்ததாம் அந்த ப்பா குருவி.
அப்பா குருவி பறந்து போனதும் அப்பா குருவி எப்ப திரும்ப வரும்னு ஜோடி குருவியும், குஞ்சுகளும் ஏக்கமா காத்துகிட்டு இருப்பாங்களாம்.


கொஞ்ச நாளிலேயே நல்லதா அழகா பெரிய கூடா கட்டிடிசாம் அப்பா குருவி.




நல்ல கூடா கட்டியாச்சு..! இப்போ அந்த கூட நிரந்தரமா பாதுகாக்கனுமே அதுக்கு இன்னும் நெறைய குச்சிகளும் நார்களும் தேவை பட்டுச்சாம்.
தன்னோட ஜோடி குருவியும் , புள்ளைங்களும் பாதுகாப்பா,நல்லபடியா இருக்காங்க அப்படிங்குற ஒரேஒரு சந்தோசத்தமட்டும் மனசுல வைச்சிக்கிட்டு மழைலயும் ,வெய்யில்லயும் அலைஞ்சு திரிஞ்சு சரியா இரை கூட திங்காம இன்னமும் குச்சிகளையும், நார்களையும் தேடிகிட்டே இருக்குதாம் அந்த அப்பா குருவி.

>