நானும் போயிட்டு வந்துட்டேன்...!

வேற எங்க..? புத்தக கண்காட்சிக்குதான் இன்னிக்கு சனி கிழமை நாளைக்கு கடைசிநாள் அதனால நல்ல கூட்டம் ..!

ஒருபதிவ போட்டுட்டு படிக்கலாம்னு நெனச்சேன்..!



ராஜீவ் கொலை வழக்கு

படிக்க ஆரம்பிச்சு ஒரே மூச்சுல முடிச்சுட்டேன்

படிச்சு முடிச்சதும் மனசுல நிக்குறது

அந்த நூறு ரூவா சலவை நோட்டும்


புத்தகத்தில் இடம் பெற்ற கீழ் கண்ட வரிகளும்

ஷாப்பிங் போன சமயம் தி நகரில் சுபாவின் கண்ணில் ஒரு சர்தார்ஜி பட்டார் .அதுவரை சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று முகம் மாறினார் .அவரது உடம்பு உதற தொடங்கியது . நளினியின் கையை பிடித்து கொண்டிருந்தவர் , மேலும் அழுத்தமாக பற்றிகொண்டார் . வியர்த்துவிட்டது.

நளினிக்கு ஒன்றும் புரியவில்லை .என்ன.. என்ன . என்று பதற எனக்கு அவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருக்கிறது சர்தார்ஜியை பார்த்தாலே வயிறு எரிகிறது .என்று சுபா சொன்னார்.

இலங்கை சென்ற இந்திய அமைதி படையில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதை தணு விளக்கினார்.


மேலும் நான் வாங்கிய புத்தகங்கள்

எர்னஸ்டோ சேகுவேரா

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

அய்யனார் கம்மா

கருவேல நிழல்

கிளிஞ்சல்கள் பறக்கின்றன

பெருவெளிச்சலனங்கள்

மரப்பாச்சியின் சில ஆடைகள்


குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்து இருக்கிறது

சிறந்த பேச்சாளராக

அதிஷ்ட ஜோதிட சாஸ்திரம்

ஸ்ரீ மத் பகவத் கீதா


>

17 comments:

S.A. நவாஸுதீன் said...

போயிட்டு வந்தாச்சா தல.

12 புத்தகங்கள், இனி 12 பதிவுகள் சுட சுட எதிர்பார்க்கலாம்.

vasu balaji said...

அசத்துங்க:).

நட்புடன் ஜமால் said...

பாலகுமாரஸ் ஒன்னும் புதுசா வரலையா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவு போட்டுட்டு அப்பறமா படிக்கிறதுங்கறது நல்லது தான்.. பகவத் கீதால்லாம் முடிச்சுட்டுத்தான் நீங்க பதிவு போட்றதுன்னா லேட் ஆகுமில்ல :)

டவுசர் பாண்டி... said...

நானும் போனேன்...

புத்தகம் வாங்க அல்ல....

பதிவு போடோனும்....

பார்ப்பம்... :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பிடிச்ச புத்தகங்களை அறிமுகப்படுத்துங்க.

Rajalakshmi Pakkirisamy said...

Happy Reading!!!

Thekkikattan|தெகா said...

அதிஷ்ட ஜோதிட சாஸ்திரம்//

இதில ஏதாவது ஆராய்ச்சியா, ஜீவா ;-)?

Anonymous said...

ம்ம்ம் கணிசமான எண்ணிக்கையில் தான் புத்தகங்கள் வாங்கியிருக்கீங்க..

இந்த புத்தக கண்காட்சியில் நம் நண்பர்கள் புத்தங்களும் இடம் பெற்றதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்களும் அவர்களுக்கு...

SUFFIX said...

சென்னைவாசிகள் கொடுத்து வச்சவங்க, தினமும் புத்தக கண்காட்சி குறித்து செய்திகளில் பார்க்கும்போது, வளைகுடாவில் இருந்து கொண்டு இவை அனைத்தையும் இழக்கிறோமே எனத் தோண்றும். பகிர்விற்கு நன்றி நண்பரே.

மணிஜி said...

நீங்கள் மொக்கை பதிவரா? நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்

மணிஜி said...

நீங்கள் மொக்கை பதிவரா? நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்

அமுதா said...

போய்ட்டு வந்து ஒரு புக்கும் படிச்சிடீங்க போல இருக்கே?

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))))

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இந்த புத்தக கண்காட்சியில் நம் நண்பர்கள் புத்தங்களும் இடம் பெற்றதில் மகிழ்ச்சி.
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்