''மரணப்படுக்கை''

நீ எந்த ஒரு காரியம் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்து கொள்!


கொஞ்ச காலம் முன்னர் ஒரு பள்ளியின் சுவற்றில் இதை படித்தேன். என்ன சொல்லுகிறது இந்த வாசகம்? ''சாகப்போறே சரியா நடந்துக்கோ'' இப்படித்தானே ?
வாழ்க்கை குறித்து சிலர் சொல்லும் விசயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

வாழ்க்கை ஒரு நெடிய பயணம் ,வாழ்க்கை ஒரு சரித்திரம் ,இப்படியெல்லாம் சொல்வது சரிதானா என்ற கேள்வியும் வருகிறது!

எனக்கு பிறகு என் பிள்ளைக்கு என் பெயர் தெரியும்,என் பேர பிள்ளைக்கு என் பெயர் தெரியும் அவன் பிள்ளைக்கு என் பெயர் தெரிய போவது இல்லை ! அவ்வளவுதான்! ஒரு பூ கருகுவதை போல,ஒரு கனி உதிர்வதை போல சர்வ சாதாரணமாய் முடிய போகிறது என் வாழ்க்கை! இதற்க்காக ஏன் பெரிதாக அலட்டி கொள்ள வேண்டும்?

MGR வாழ்ந்து விடாத வாழ்க்கையா,சிவாஜி கணேசன் வாழ்ந்து விடாத வாழ்க்கையா ? அவர்களும் சிம்பிளாக செத்துத்தானே போனார்கள் ? பெரிய பிரபலங்களே கால வெள்ளத்தில் காணாமல் போகும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் ?

முப்பத்தைந்து வருடம் போய்விட்டது எப்படி போனது...? சட்டென போய்விட்டதுபோல இருக்கிறது ! ஐம்பது வயதிலும் இப்படித்தான் தோணும்! அறுபத்தைந்து வயதிலும் இப்படித்தான் தோண போகிறது!


கடந்த காலத்தை இப்போது அசை போட்டால் சில தவறுகள்செய்திருப்பது புரிகிறது! இன்னும் கொஞ்சம் படித்து இருக்கலாமோ? இங்கிலீஷ் மீடியம் படித்து இருக்கலாமோ ? ஊதாரி தன செலவுகளை குறைத்து இருக்கலாமோ ? இப்படியெல்லாம் தோன்றுகிறது ?


ஐம்பது வயதில் வாழ்க்கையை அசை போட்டால் இப்போது செய்வது தவறென தோன்றுமா?

இப்போது ஒரு எண்ணம்!!!!!

நான் அறுபத்தைந்து வயது வயோதிகனாக மாறி மரண படுக்கையில் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்! முப்பத்தைந்து வயது மனிதனாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன் இரண்டுமே நான்தான்!!!

அறுபத்தைந்து வயது வயோதிகனாக வாழ்க்கையை அசை போடுகிறேன் அதே அசை போடும் வாழ்க்கையை முப்பத்தைந்து வயதில் லைவ் ஆக வாழ்கிறேன்!!!



அறுபத்தைந்து வயது என்னிடம் முப்பத்தைந்து வயது நான் ஆலோசனை கேட்டு நடந்து கொண்டால் இனியும் தவறு ஏதும் செய்யாமல் இருக்கலாம் அல்லவா ?

அப்படி ஆலோசனை சொன்னால் என்ன சொல்வேன்?

கடமைகளை மீதம் வைக்காமல் நிறைவேற்றிவிடு!

யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவருக்கும் கெடுதல் செய்யாதே! மரண படுக்கையில் குற்ற உணர்ச்சியுடன் இருப்பது மிகப்பெரிய கொடுமை! மன்னிப்பும் கேட்க முடியாது ! பரிகாரமும் தேட முடியாது!

வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்!

மேலே சொன்ன வாக்கியம்;-

நீ எந்த ஒரு காரியம் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்து கொள் !


( முப்பத்தைந்து வயது நான் அறுபத்தைந்து வயது என்னை நோக்கி வெகு வேகமாக சென்று கொண்டு இருக்கிறேன்)






>