வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் ......தொடர் பதிவு

அழைப்பு விடுத்த அமிர்தவர்ஷிணி அம்மாவுக்கு
நன்றி!


சில நல்ல தமிழ் சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து
விட்டதால் தமிழின் இனிமை குறைந்து விட்டது என்பது
உண்மைதான்! ஆனால், சில தமிழ் சொற்கள் வழக்கிலிருந்து
ஒழிந்து விட்டதால் தமிழ் கொஞ்சம் தெளிந்து இருக்கிறது.

ஆமாம்! நான் சொல்லவிருப்பது சென்னை தமிழ். ஆனால்!
இவையெல்லாம் தமிழ் சொற்கள்தானா என கேட்க கூடாது.


பேமானி ; இந்த வார்த்தை ஒரு திட்டு மொழி அடுத்தவரை
திட்ட உதவும்.

சோமாறி; இதுவும் மேற்சொன்ன மாதிரிதான்

கஸ்மாலம்; இதுக்கு அர்த்தம் தெரிஞ்சா சொல்லுங்க

பேஜாரு; கொஞ்ச காலம் முன்னர் வரை நெறைய பேரால்
சொல்லப்பட்ட வார்த்தை
தொல்லை,ஹிம்சை,குழப்பம்
ஆகியவற்றிற்கு மாற்று சொல்.

இஸ்துகினு; இழுத்துக்கொண்டு என்பதற்கு மாற்றுசொல்.
இப்போது அதிகம் இந்த வார்த்தையை கேட்க
முடியவில்லை.

மேற்கண்ட சொற்கள் முற்றிலுமாக ஒழியவில்லை
ஆனால் குறைந்து இருக்கிறது.

மேலும் சில சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டால்
''மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்''



>