மேன்சனில் நடந்த நான்சென்ஸ் -நீதி கிடைக்குமா ?

தற்போது சென்னை நகரில் அக்னி சுடர் என்னும் செய்தி பத்திரிக்கை வலம் வருகிறது ஒரு இந்த பத்திரிகை போலீஸ் -பொதுமக்கள் நட்புறவு வார இதழாக வருகிறது! சமுக அவலங்களையும்,தவறு செய்யும் அதிகாரிகள்,காவல் துறையினர்,அரசியல் வாதிகள் என எவரையும் விட்டு வைக்காமல் எல்லோரையும் சுட்டி காட்டுகிறது சில இடங்களில் இந்த பத்திரிகை செய்தியால் நடவடிக்கையும் எடுக்க பட்டு உள்ளது!

இந்த பத்திரிக்கை மிக தைரியமாகவும்
நேர்மையாகவும் செயல் பட
ஒரு முக்கிய காரணம் உள்ளது !

இந்த பத்திரிக்கையின் Executive Director ஆக இருப்பவர்
சமுக நல ஆர்வலர்.... மக்கள் பிரச்சனைக்காக பல
பொதுநல வழக்குகளை தொடுத்து நியாயம்கிடைக்கசெய்த

திரு ,ட்ராபிக் கே .ஆர். ராமசாமி அவர்கள்...

இதன் ஆசிரியர் திரு , டி .எஸ் .ஜேம்ஸ் நாயகம்

தலைமை நிருபர் திரு .என் .ஜெகதீஸ்வரன்

இதில் ஜெகதீஸ்வரன் என்பவர் எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்!

சமீபத்தில் பதிவர் ரமேஷ் என்பவர் கிணறு வெட்ட பூதம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தார் நண்பர் ஜமால் பதிவின் வாயிலாக அந்த பதிவினை பார்த்தேன்! அந்த பதிவில், தான் தங்கி இருந்த மேன்சனில் நல்ல குடிநீர் வேண்டி போராடியது,அந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது அந்த பிரச்சனையால் அவர் அடைந்த இன்னல்கள் எல்லாவற்றையும் தம் பதிவில் கூறி இருந்தார்! அந்த சுட்டி இங்கே!

நான் அக்னி சுடர் பத்திரிக்கையின் தலைமை நிருபர் ஜெகதீஸ்வரனை அழைத்து அந்த பதிவினை காட்டினேன்! இந்த பிரச்சனைக்கு தங்கள் பத்திரிகை ஏதேனும் செய்ய முடியுமா என கேட்டேன்! அவர் திரு ரமேஷ் அவர்கள் இந்த பிரச்சனை சந்பந்தமாக என்ன என்ன ஆதாரங்கள் வைத்து உள்ளாரோ அனைத்தும் வேண்டும் என கேட்டார்!

நான் திரு ரமேஷ் அவர்களை தொலை பேசியில் அழைத்து விபரம் சொன்னேன்! அவரும் மறுநாள் தான் தண்ணீர் பரிசோதனை செய்த சான்று, மற்றும் கமிஷனர் அலுவலகம் சென்ற சான்று, இந்த பிரச்சனை ஜுனியர் விகடன் பத்திரிகையில் வந்த செய்தியின் நகல்,டெக்கான் குரோனிகல் பத்திரிக்கையில் செய்தி வந்த நகல் மேலும் சில ஆதாரங்களை நேரில் வந்து என்னிடம் கொடுத்தார். நான் அதை நிருபரி டம் கொடுக்க இந்த பிரச்சனை திரு ட்ராபிக் ராமசாமி அவர்களிடம் செல்கிறது. திரு ட்ராபிக் ராமசாமி அவர்களும் திரு. ரமேஷை அழைத்து சில விபரங்களை கேட்டு அறிந்துள்ளார். இப்போது இந்த பிரச்சனை அக்னி சுடர் பத்திரிகையில் மேன்சனில் நடந்த நான்சென்ஸ் என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தியாக வெளிவந்தது உள்ளது.





இந்த அக்னி சுடர் பத்திரிகையானது தலைமை செயலகம் ,எழும்பூர் கமிஷனர் அலுவலகம் ,புறநகர் கமிஷனர் அலுவலகம், உயர்நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் ,சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், மற்றும் முதலமைச்சர் அலுவலகம்,அனைத்து அமைச்சக அலுவலகங்கள் ,மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு செல்கிறது!!!


நீதி கிடைக்குமா ? பொறுத்திருந்து பார்க்கலாம்!!


..................................................................

>

24 comments:

`Prabu said...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும் !

ramesh sadasivam said...

நண்பர் ஜீவா அவர்களுக்கு, தாங்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு மனிதனின் போராட்டத்திற்கு தோள் கொடுக்க வேண்டும் என நினைக்கும் நல்ல உள்ளங்கள் இருப்பதை தங்களாலும் தங்களைப் போன்ற சில வலைப் பதிவர்களாலும் கண்டு கொண்டேன். எனக்கு இதுவே வெற்றிப் பெற்ற நிறைவை அளிக்கிறது. தங்களுக்கு இந்த சுட்டியை கொடுத்த நண்பர் ஜமாலுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thamiz Priyan said...

முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

அப்துல்மாலிக் said...

வெட்டியா ஏதாவது கவிதை எழுதினோம், மொக்கை போட்டோம் அதை படித்து கும்மியடித்தோம் என்ற எல்லைகளுக்கு அப்பார்பட்டு இது மாதிரி சமூக அவலங்களுக்கும் குரல் கொடுத்து அதன் மூலம் தீர்வு காணுவதற்கும் இந்த பதிவுலகம் பயன்படுவது குறித்து மிக்க மகிழ்ச்சி (இப்போது நான் எழுதிய "தமிழர்களாகிய நம் நிலை" பதிவிற்கு விடைக்கிடைத்திருக்கிறது.

இதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஜீவாண்ணாவிற்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

தொடரட்டும் உமது பணி....

அப்துல்மாலிக் said...

வெட்டியா ஏதாவது கவிதை எழுதினோம், மொக்கை போட்டோம் அதை படித்து கும்மியடித்தோம் என்ற எல்லைகளுக்கு அப்பார்பட்டு இது மாதிரி சமூக அவலங்களுக்கும் குரல் கொடுத்து அதன் மூலம் தீர்வு காணுவதற்கும் இந்த பதிவுலகம் பயன்படுவது குறித்து மிக்க மகிழ்ச்சி (இப்போது நான் எழுதிய "தமிழர்களாகிய நம் நிலை" பதிவிற்கு விடைக்கிடைத்திருக்கிறது.

இதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஜீவாண்ணாவிற்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

தொடரட்டும் உமது பணி....

தமிழ். சரவணன் said...

இதுபோல் காந்தி மகானால் துவக்கப்பட்டது சிறு இயக்கம் ஆலமரமாகி வெள்ளையனை விரட்டியது... பாரதியன் "அக்கினிக்குஞ்சு" நண்பர் ஸ்ரீ ரமேஸ் சதாசிவம் அவர்களுக்கு ஆதரவாக தோள்கொடுப்போம்... மனிதம் காப்போம் மனிதநேயம் காப்போம்... பணம் தின்று பிழைக்கும் பெருச்சாளிகளை திருத்துவோம்....

sakthi said...

நீதி கிடைக்குமா ? பொறுத்திருந்து பார்க்கலாம்!!

வேற வழி

நட்புடன் ஜமால் said...

வெற்றியடைய பிரார்த்திக்கிறேன்.

நீங்கள் எடுத்த முயற்சி அருமை அண்ணா.

அமுதா said...

நல்ல முயற்சி... வெற்றி கிடைக்கட்டும்

S.A. நவாஸுதீன் said...

சும்மா கூட்டத்தோட கூட்டமா பாராட்டிவிட்டு கடமை முடிந்தது என்று இல்லாமல், அதற்காக துணை நின்று தோள் கொடுத்து மிக அருமையான ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தல. நிச்சயம் உங்களின் முயற்சிகள் வெற்றி பெரும்.

Vidhoosh said...

எதுவும் என்னால் செய்ய முடியலையே. அவர்கள் கதி என்னவாச்சோ என்று நினைத்துக் கொண்டு, தினமும் இறைவனிடம் ஒரு வார்த்தை அவர்களுக்கும் வேண்டிக் கொள்வேன்.

உங்கள் முயற்சி கண்டு மகிழ்கிறேன்.
வாழ்த்துக்கள்.
-வித்யா

குடந்தை அன்புமணி said...

தங்களின் முயற்சிக்கு என் சார்பிலும் மிக்க நன்றி நண்பா. நீதிக்காக போராடிவரும் ட்ராபிக் ராமசாமி அவர்களின் கைக்கு இந்தப் பிரச்சினை சென்றிருப்பதால் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

அந்த அக்னி சுடர் இதழின் முகவரி தெரியப்படுத்துங்கள் நண்பா. சமயத்தில் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

துபாய் ராஜா said...

//வெட்டியா ஏதாவது கவிதை எழுதினோம், மொக்கை போட்டோம் அதை படித்து கும்மியடித்தோம் என்ற எல்லைகளுக்கு அப்பார்பட்டு இது மாதிரி சமூக அவலங்களுக்கும் குரல் கொடுத்து அதன் மூலம் தீர்வு காணுவதற்கும் இந்த பதிவுலகம் பயன்படுவது குறித்து மிக்க மகிழ்ச்சி//

ரிப்பீட்டேய்ய்ய்ய்

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net

அமிர்தவர்ஷினி அம்மா said...

அந்தப் பதிவிற்கு போய் கடமை தவறாமல் கமெண்ட் போட்டதை மட்டுமே நாங்கள் செய்தோம்.
ஆனால் நீங்கள் எடுத்த இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குறியது ஜீவன்.

நியாயம் கிட்டும் என்று எதிர்பார்ப்போம்

வால்பையன் said...

நல்ல முயற்சி!

RAMYA said...

பதிவை படித்துவிட்டு மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை பொறுப்பாகவும் கச்சிதமாகவும் முடித்த உங்களின் உயர்ந்த சமுதாய நோக்கு அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு செயல் ஜீவன்.

உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்!!

எனக்கு மிகவும் பெருமையா இருந்தது இவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் என நினைக்கையில்.

இந்த எண்ணம் தந்த இறுமாப்பில் இந்த பின்னூட்டம் இடுகிறேன்.

இது போல் மேலும் பல செல்யல்கள் தேவையானவர்களுக்கு தேவையான நேரத்தில் செய்து முடிக்க எனது வாழ்த்துக்கள்!!

இது போல் நீங்க இறங்கும் ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன் ஜீவன்.

உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் ஜீவன்!

கலை அக்கா said...

திரு ஜீவன் அவர்களுக்கு,

தங்களின் சமுதாய தொண்டு சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ட்ராபிக் ராமசாமி அவர்கள் சிறந்த சமுதாய ஆர்வலர். எங்கு தவறு நடந்தாலும் அதை சுட்ட தயங்கமாட்டார். உரிய நீதி கிடைக்க போராடுவார்.

அவரின் துணையோடு இது போன்ற மனித நேயமற்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசு அலுவலர்களின் முக திரையையும் மற்றும் இரக்கமற்ற முதலாளிகளின் கொடிய செயல்களையும் நீதியின் முன் நிறுத்தி அப்பாவிகளுக்கு நல்லது செய்ய எனது வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

பாராட்டுக்கள் ஜீவன்.

தருமி said...

தொடரட்டும் .........

Anonymous said...

பதிவை படிச்சோமா கமெண்ட் போட்டோமா என்றில்லாமல் ஒரு நியாயமான போராட்டத்திற்கு செவி சாய்த்து காரியத்தை கையில் எடுத்து இருக்கீறீர்கள் ரமேஷின் போராட்ட குணமும் உங்கள் நோக்கமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...இங்கு உங்களை நினைத்தும் பெருமைபடுகிறோம் நாங்கள்....

sakthi said...

good job u did jeewan,can i get the address of agnisudar book for subcription.

sakthi said...

valthukal jeewan,
did a great job.keep it up.i need agni sudar book's address fo subcription

Keerthivasan said...

I need to appreciate him for his diginity to everyone who support this blog and matter just listen for a moment. You will easily comment the post that you seen but, when we going to stop it?

We need the complete washout of this current political system. Else even our grandson's will suffer 100 times more than what we facing now.

Jai Hind