வேண்டாத குணங்கள் ??

ஒரு மனிதனின் வாழ்க்கை நிம்மதியாக இருக்க சில குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என சொல்ல படுகிறது. ஆசை, கோபம், எதிர்ப்பு உணர்வு, பழி வாங்கும் செயல், போன்ற குணங்கள் கொண்டவர்கள் நிம்மதி இழந்து தவிப்பார்களாம். ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கையா? வெற்றி கரமான வாழ்க்கையா? நிம்மதிக்கும் வெற்றிக்கும் இடைவெளி அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. நல்லவன் நிம்மதியாக இருக்கிறான், வல்லவன் வெற்றி அடைகிறான். நல்லவன் நல்லவன் என்றால்? வல்லவன் தீயவனா? அப்படி அல்ல! நல்லவன் ஒருவன் தீய குணங்கள் கொண்ட வல்லவனிடம் தோற்று போய்விட கூடாது.நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்.


ஆசை வேண்டும்!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொன்னார் அவர் சொன்னது நிம்மதியான வாழ்க்கைக்கு! ஆனால் வெற்றிகரமான வாழ்க்கைக்கு? ஆசையே எல்லாவிதமான இன்பத்திற்கும் அடிப்படை காரணம். ஆசை இல்லாதவன் அரை மனிதன்.ஆசையே வெற்றி தரும்.


கோபம் வேண்டும்!

கோபம் என்பது ஒரு சக்தி! கோபம் என்பது ஒரு ஆற்றல்! ரவுத்திரம் பழகு எனஏன் சொன்னார்கள்? கோபம் அணைக்கட்டில் நிரம்பி இருக்கும் நீரை போன்றதுஅதை முறையாக வெளிப்படுத்தினால் விவசாயம் செய்யலாம். கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


எதிரி வேண்டும்!

உனக்கு நூறு நண்பர்கள் இருக்கிறார்களா அது குறைவு! உனக்கு ஒரு எதிரி இருக்கிறானா? அது அதிகம்! இது பழைய பழமொழி! ஆனால்? வெற்றிகரமான வாழ்க்கைக்கு? எதிரிகள் வேண்டும்! கவிஞர் வைரமுத்து சொன்னது போல, எதிர்ப்புகள் வாழ்க்கையின் பிடிமானங்கள்! எதிரி என்று உனக்கு யாரும் இல்லையெனில் எதிரியை ஏற்படுத்திகொள். உன்னை உனக்கு உணர்த்துவது. உன் எதிரிதான்.

நண்பர்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால்? எதிரி இல்லாமல் வளர முடியாது!

பழி வாங்கும் உணர்வு வேண்டும்!

எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயம் அவன் வறுமை காரணமாகவோ அவன் இயலாமை காரணமாகவோ அவமான பட்டு இருப்பான்அல்லது உதாசீனபடுத்த பட்டு இருப்பான். அப்படி அவன் இகழ படும்போது அவன் தன்னை இகழ்ந்தவர்களை பழிவாங்கும் உணர்வோடு எதிர் கொள்ள வேண்டும். பழிவாங்குதல் என்றால் தன்னை இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா? இல்லை! அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான்.


வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு சவால் இருந்து கொண்டேஇருக்க வேண்டும் .




>

32 comments:

நட்புடன் ஜமால் said...

வேண்டாம் என்று சொல்லி

வேண்டும் என்ற வார்த்தைகள் சொல்லி

அருமை அண்ணா

நட்புடன் ஜமால் said...

\\உன்னை உனக்கு உணர்த்துவது

உன் எதிரிதான்.\\

இது மிக(ச்) சரி

RAMYA said...

Me the second??

ராமலக்ஷ்மி said...

வேண்டாத குணங்களை நமக்கு வேண்டும் குணங்களாக வெற்றிக்கு வழிகளாக ஆக்கிக் கொள்வதும் நம் வசமே என அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் ஜீவன். வாழ்த்துக்கள்.

புதியவன் said...

//கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும்.//

நான் மிகவும் ரசித்த வரிகள்...

நட்புடன் ஜமால் said...

\\கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும்\\

மிக(ச்) சிறப்பா சொல்லியிருக்கீங்க!

குடந்தை அன்புமணி said...

//நிம்மதிக்கும் வெற்றிக்கும் இடைவெளி அதிகம் இருப்பதாக தோன்றுகிறது.//

உண்மைதான்!

குடந்தை அன்புமணி said...

//தன்னை இகழ்ந்தவர்களை பழிவாங்கும் உணர்வோடு எதிர் கொள்ள வேண்டும். பழிவாங்குதல் என்றால் தன்னை இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா? இல்லை! அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான். //

சும்மா 'நச்'ன்னு இருக்கு...

அப்துல்மாலிக் said...

//நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்.
///

இது இருந்துட்டா அவந்தான் மகான்

அப்துல்மாலிக் said...

//ஆசை இல்லாதவன் அரை மனிதன்.ஆசையே வெற்றி தரும்.//

ஆசை இல்லையென்றால் அந்த இலக்கை அடையவேமுடியாது, அழகா சொன்னீர்கள்

அப்துல்மாலிக் said...

//கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்/

சரியான பாய்ண்ட், கோபத்தை அடக்கியாளனும்

அப்துல்மாலிக் said...

//உன்னை உனக்கு உணர்த்துவது. உன் எதிரிதான்.
நண்பர்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால்? எதிரிகள் இல்லாமல் வளர முடியாது !
/

சரியான வரிகள்...

அப்துல்மாலிக் said...

//வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு சவால் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
//

இல்லையென்றால் அந்த வெற்றி ருசிக்காது

Rajeswari said...

துன்பமில்லா ஆசை கேட்டேன் ..
எல்லை மீறாத கோபம் கேட்டேன்..
வாழ்வின் வளர்வுக்கு எதிரிகள் கேட்டேன்
வாழ்ந்து காட்ட பலியுனர்வு கேட்டேன்.

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை .(அஜித் ஸ்டைலில் பாடி பழகவும்)
(ம்ம் எல்லாத்தையும் ஜீவன் அண்ணாவே எடுத்துக்கிட்டா எங்களுக்கு எப்படி கிடைக்கும்)

ஜீவா said...

வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு சவால் இருந்து கொண்டேஇருக்க வேண்டும் .////

மிகச்சரியாக சொன்னீர்கள் , நன்றாக உள்ளது உங்களின் பதிவு, வாழ்த்துக்கள்

தோழமையுடன்
ஜீவா

RAMYA said...

//
நல்லவன் நல்லவன் என்றால்? வல்லவன் தீயவனா? அப்படி அல்ல! நல்லவன் ஒருவன் தீய குணங்கள் கொண்ட வல்லவனிடம் தோற்று போய்விட கூடாது.நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்.
//

சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜீவன்
இரெண்டு குணங்களும் ஒரு சேர் இருப்பவனால்தான் சாத்திக்க முடியும்.

குணம் இருந்து, வலிமை இல்லையேல்
வலிமை இருந்து குணம் இல்லையேல்
மனிதன் என்ற ஒரு சொல் அங்கே
முழுமை அடைவது இல்லை.

RAMYA said...

//
ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொன்னார் அவர் சொன்னது நிம்மதியான வாழ்க்கைக்கு! ஆனால் வெற்றிகரமான வாழ்க்கைக்கு? ஆசையே எல்லாவிதமான இன்பத்திற்கும் அடிப்படை காரணம். ஆசை இல்லாதவன் அரை மனிதன்.ஆசையே வெற்றி தரும்.
//

வெற்றியின் ரகசியம் தான் இங்கே ஒளிந்து கொண்டுள்ளதே.

ஆசை என்பதை இங்கு எதிர் மறையாக இல்லாமல் நேர்மறையாக சொல்லி இருக்கின்றீர்கள்.

ஆசை இருந்தால் வெற்றி உறுதி என்கின்றீர்கள் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஒன்றும் புரியாது ஆழ்ந்து சிந்த்தித்தால் உங்கள் கூற்றில் உள்ள உண்மை புரியும்.

RAMYA said...

//
கோபம் என்பது ஒரு சக்தி! கோபம் என்பது ஒரு ஆற்றல்! ரவுத்திரம் பழகு எனஏன் சொன்னார்கள்? கோபம் அணைக்கட்டில் நிரம்பி இருக்கும் நீரை போன்றதுஅதை முறையாக வெளிப்படுத்தினால் விவசாயம் செய்யலாம். கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
//

இதை கையாள ஆழ்ந்த பக்குவம் வேண்டும் ஜீவன் கோபம் வந்தவுடன் எதிராளியின் மீது காட்டத்தான்
தோன்றும்.

ஆழ்ந்து சிந்த்தித்தால் நமது கோபம் நமக்கே அசிங்கமாக இருக்கும்.

இப்படி செய்து விட்டோமே என்று வருத்தமாக கூட இருக்கும்.

இந்தக் கூற்றை ஒரு யோசனையாக ஏற்று நடக்கலாம்.

RAMYA said...

//
உனக்கு நூறு நண்பர்கள் இருக்கிறார்களா அது குறைவு! உனக்கு ஒரு எதிரி இருக்கிறானா? அது அதிகம்! இது பழைய பழமொழி! ஆனால்? வெற்றிகரமான வாழ்க்கைக்கு? எதிரிகள் வேண்டும்! கவிஞர் வைரமுத்து சொன்னது போல, எதிர்ப்புகள் வாழ்க்கையின் பிடிமானங்கள்! எதிரி என்று உனக்கு யாரும் இல்லையெனில் எதிரியை ஏற்படுத்திகொள். உன்னை உனக்கு உணர்த்துவது. உன் எதிரிதான்.
//

என்னோட எண்ணங்கள் உங்கள் இந்த விளக்கங்களுடன் ஒத்து போகின்றது.

நான் இவ்வாறு நினைத்துதான் செயல் படுவேன். வெற்றியும் அடைந்து இருக்கின்றேன்.

அருமை நண்பா!!

ஆழ்ந்த சிந்தனை உங்களுக்கு
சிந்தனைகளின் சுரங்கம் நீங்கள்.

இன்னும் உங்களுக்குள் என்னென்ன
ஒழித்து வைத்திருக்கின்றீர்கள் ஜீவன்!!

RAMYA said...

//
எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயம் அவன் வறுமை காரணமாகவோ அவன் இயலாமை காரணமாகவோ அவமான பட்டு இருப்பான்அல்லது உதாசீனபடுத்த பட்டு இருப்பான். அப்படி அவன் இகழ படும்போது அவன் தன்னை இகழ்ந்தவர்களை பழிவாங்கும் உணர்வோடு எதிர் கொள்ள வேண்டும். பழிவாங்குதல் என்றால் தன்னை இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா? இல்லை! அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான்.
//

ஆஹா அருமை அருமை உங்களின் ஒவ்வொரு பரிணாமங்களும்
மிகத்தெளிவான நடையுடனும், தீர்க்கமான சிந்தனையின் ஆற்றலையும்
வெளிப்படுத்துவதாக உள்ளது ஜீவன்.

நீங்க நிறைய எழுதுங்கள், எழுதுவதற்காக வாரத்தில் ஒரு இரெண்டு மணி நேரம்
ஒதுக்குங்கள்.

உங்களால் பல நல்ல பதிவுகளை மிகச் சிறந்த முறையில் கொடுக்க முடியும். என்னை போன்றோர் அதை படித்து ரசிப்போம்.

இது ரம்யாவின் மிகத் தாழ்மையான வேண்டுகோள் !!!

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஜீவன் அண்ணே..

பதிவை படிச்சுட்டு அப்படியே உறைஞ்சு போயிட்டீங்க.

அருமை, பிரமாதம் என்றால் கூட அது போதாதுங்க

இராகவன் நைஜிரியா said...

// நிம்மதிக்கும் வெற்றிக்கும் இடைவெளி அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. //

நிம்மதிக்கும் வெற்றிக்கும் இடைவெளி அதிகம்தான்.

இராகவன் நைஜிரியா said...

// கோபம் அணைக்கட்டில் நிரம்பி இருக்கும் நீரை போன்றதுஅதை முறையாக வெளிப்படுத்தினால் விவசாயம் செய்யலாம். கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.//

சரியாகச் சொன்னீர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கையா? வெற்றி கரமான வாழ்க்கையா?

யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

பழிவாங்குதல் என்றால் தன்னை இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா? இல்லை! அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான்.
100க்கு 100 உண்மை.
வாழ்ந்து காட்டவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டாலே, மேற்கூறிய எல்லாமே அதில் அடங்கிவிடும்.

சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. ஏனோ இந்தப் பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோபம் அணைக்கட்டில் நிரம்பி இருக்கும் நீரை போன்றதுஅதை முறையாக வெளிப்படுத்தினால் விவசாயம் செய்யலாம். கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்//

ம், சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.


கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். //


இதை உங்க சிங்கமணி கிட்ட சொல்லியிருக்கீங்களா.

(கோபப்பட்டு சட்டுன்னு எதையாவது தூக்கி எறிஞ்சிட்டா அதை கேட்ச் பிடிக்கும் திறமையும் எதிர்த்தாப்பல இருக்கறவங்களுக்கு வேணும்.)

எவ்வளவோ தாங்கிட்டோம், இதை தாங்கமாட்டோமா, என்ன ஜீவன்?!!!!!

அண்ணன் வணங்காமுடி said...

பதிவு அருமை

நல்லவனுக்கு நல்லவனாகவும்

கெட்டவனுக்கு கெட்டவனாகவும்

இருக்க வேண்டும்.

அமுதா said...

மிக அழகாக கூறியுள்ளீர்கள். கத்தி போன்றவை இக்குணங்கள். குத்திக் கிழிக்கலாம் அல்லது வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.

/*கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*/
/*இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா? இல்லை! அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான்*/.அருமை

குடுகுடுப்பை said...

இந்தக்குணங்கள் அனைத்தும் இயல்பாணவை. அதை வெற்றிகரமாக பயன்படுத்துதல் பகுத்தறிவு

நல்ல பதிவு.

ஹேமா said...

ஒவ்வொரு வரிகளும் வாழ்வோடு ஒன்றித் தேவையான பதிவு.மனதில் பதியப்படவேண்டிய விஷயங்கள்.

Anonymous said...

நண்பர்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால்? எதிரி இல்லாமல் வளர முடியாது!

கலக்கல்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

template மாத்திட்டீங்க போல, புது டெம்ப்ளேட் நல்லா இருக்கும்

ஆமா டெம்ப்ளேட் மாத்தினீங்களே, எங்களுக்கு ட்ரீட் கெடையாதா.?!!!!!!!!

Tech Shankar said...

Thanks.. good post