என்ன சொல்லி ? எப்படி உணர்த்தி கூப்பிட்டு இருக்கும் அந்த யானை ?


கொஞ்ச நாள் முன்னாடி சன் நியூஸ்ல ஒருகாட்சி ,ஒருகாட்டு பகுதில வனத்துறையினர் காட்டு விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைச்சு இருக்காங்க ! அதுல தவறிபோய் ஒரு குட்டியானை விழுந்துடுது . தாய் யானை வந்து அந்த குட்டியானையை காப்பாத்த எவ்வளவோ முயற்சி பண்ணுது முடியல . உடனே அந்த தாய் யானை காட்டுக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சுடுது . கொஞ்ச நேரத்துல திரும்பி வர்ற அந்த யானை அது கூட முணு யானைங்கள கூட்டிகிட்டு வருது எல்லா யானைங்களும் சேர்ந்து அந்த குட்டியானைய காப்பாத்தி கூட்டிகிட்டு காட்டுக்குள்ள போய்டுது .நம்மையெல்லாம் ஆச்சர்யபடவைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி இது .


அதுசரி ? காட்டுக்குள்ள போன தாய்யானை என்ன சொல்லி எப்படி உணர்த்தி மத்த யானைகளை கூப்பிட்டு இருக்கும்!!!!

.....................................................................................................................................................................

>

ஒரு பீரும்! நாலு பேரும்!!

''குடி குடியை கெடுக்கும் குடிபழக்கம்
உடல் நலத்திற்கு தீங்கானது''

தண்ணி அடிக்கிறதை பத்தி ரொம்ப நாளா பதிவெழுத ஆசை! எழுதலாமா வேணாமான்னு ஒரே யோசனை கடசில எழுதிடலாம்னு முடிவு பண்ணியாச்சு! கூட,குறைய இருக்கும் அட்ஜெஸ் பண்ணிகோங்க!

அப்போ எனக்கு பதினேழு,பதினெட்டு வயசு இருக்கும். எங்க வீட்டு பக்கம் இருக்கும் சிலபேர் சின்னதா ஒரு டூர் கிளம்பினாங்க! ஏற்பாடு பண்ணினது என்னை விட வயசு கொஞ்சம் அதிகமுள்ள அண்ணனுங்க! கல்லணை,ஸ்ரீ ரங்கம்,சமயபுரம்,முக்கொம்பு மலைகோட்டை இங்கெல்லாம் போறதா ப்ளான். அதிகாலைல கிளம்பி நைட் வந்துடலாம்.வீட்டுல தொல்லை பண்ணி பர்மிசன் வாங்கியாச்சு என் வயசு பசங்க ஒரு அஞ்சாறுபேர் மீதி எல்லாம் பெரியவங்க.மொத்தம் பதினாறு பேர் வேன்ல கிளம்பினோம்.


அதிகாலை கிளம்பி கல்லணை பார்த்துட்டு, ஸ்ரீ ரங்கம் போயிட்டு,அடுத்து சமயபுரம் பார்த்தாச்சு. அடுத்து முக்கொம்பு போற ப்ளான்! சமயபுரம் போயிட்டு திரும்புறோம் வேன் ஒரு ஒயின் ஷாப் பக்கத்துல நிக்குது.அண்ணன் மாருங்க எல்லாம் ஒண்ணுகொண்ணு பார்த்துகிட்டு உனக்கு என்ன பீரா?சரக்கா? ன்னு விவாதம் நடக்குது!


நம்ம வயசு செட்டுல கிருஷ்ண மூர்த்தி!கிருஷ்ண மூர்த்திதான் முதல்ல ஆரம்பிச்சது.டேய் நாம பீர் குடிப்போமா? எனக்கு பயமும்! ஆசையும்! முதல்ல வேணாம்னு தோணிச்சு அப்புறம் முடிவு பண்ணிட்டோம் பீர் குடிக்க. நான்,கிருஷ்ண மூர்த்தி,பிரபாகரன் மூணு பேரும் .உடனே பாரதின்னு ஒருத்தன் அவன் நானும் வரேன்னு சொல்ல இப்போ ரு பீரு! நாலு பேரு!! முக்கொம்பு போயாச்சு! அண்ணன் மாருங்க எல்லாம் வேன்லயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க! நாங்க நாலுபேரும் பீர் பாட்டில வைச்சுகிட்டு மறைவான இடம் தேடி அலையுறோம். ஒரு படிக்கட்டுக்கு கீழ போய் மறைவா நின்னுகிட்டோம் கிருஷ்ண மூர்த்தி பல்லால கடிச்சு பாட்டில தொரக்குறான்.புஸ்ஸ்ஸ்ஸுனு ஒரே நுரையா அடிக்குது ஐயய்யோ எல்லாம் நுரையா போய்ட போகுதேன்னு எனக்கு பயம்.அப்படியே பாட்டில சாய்ச்சு புடிச்சு நுரை அடங்கினதும் குடிக்க போறோம் அப்படியும் கீழ கொஞ்சம் போய்டுச்சு. பாட்டில் மேல அளவு வைச்சுகிறோம்.ஒருத்தருக்கு இவ்வளவுன்னு முதல்ல கிருஷ்ணமூர்த்தி. .அடுத்து பாரதி பாட்டில் மேல கட்டை விரல வைச்சு அடையாளம் பண்ணிக்கிட்டு குடிக்கிறான் அடுத்து நான் அன்னிக்கு நான் அடிச்ச அந்த முதல் நாள் நல்ல சுபயோ சுபதினமா இருந்திருக்கும் போல. ஒருவாய் குடிக்கிறேன் ஒரே கசப்பு நான் நினைச்ச சுவை இல்ல அடுத்த வாய் குடிக்கிறேன் லேசா குமட்டுரதுபோல இருக்கு பிரபாகரன் பார்த்துகிட்டே இருக்கான் எங்க அவன் பங்க குடிசிரபோரானோன்னு பார்த்துகிட்டே இருக்கான் என்னால குடிக்கவும் முடியல கொடுக்கவும் மனசு வரல.மல்லு கட்டி குடிச்சுட்டேன்.பிரபாகரனும் குடிச்சிட்டான்.

லேசா போதை வர்றமாதிரி இருந்தது! ஆனா போதை வரல ரெண்டுவாட்டி பீர் ஏப்பம் வந்தது அப்போ ஒரு பீல் வந்தது போதை மாதிரி! பீர் அடிச்சதால வந்த மன பிராந்தியா இருக்கும் போல. அன்னிக்கு கொஞ்சமா குடிச்துதான் பீர் மேல ஆசை அதிகமா ஆயிடுச்சி ஊருக்கு வந்து ஒரு பீர் வாங்கி ரெண்டுபேர்,அப்புறம் ரெண்டு பீர் வாங்கி முணு பேர்னு நல்ல முன்னேற்றம்.பீர்ல இருந்து பிராண்டி விஸ்கிக்கு மாறுனதுக்கு காரணம் பண பற்றா குறைதான்.ஒரு ''ஓல்ட் மங்க்'' புல் வாங்கி ஏழு பேர் அடிச்சு இருக்கோம்.

பதிவு வேற பெருசாஆயிட்டே போகுது ம்ம் தண்ணி அடிக்கிறத பத்தி ரெண்டு பதிவா போடமுடியும்? ஆரம்பிச்சாச்சு முடிச்சுடுறேன் அட்ஜெஸ் பண்ணிகோங்க!!

வருசங்கள் போச்சு சென்னை வந்தாச்சு ஒரு குவாட்டர முழுசா அடிக்கிற அளவுக்கு டெவலப் மென்ட். எங்க ஏரியா தாண்டி எங்கயாச்சும் ஒதுக்கு புறமா இருக்குற பாருக்கு போவோம் ஒரு நாலைஞ்சு பேர். அப்போ அங்க ஒருத்தர அடிக்கடி மீட் பண்ணுவோம் கொஞ்சம் தூரத்து சொந்தம்! எங்க பக்கம் திரும்பி கேவலமா ஒரு பார்வை பார்ப்பாரு! அப்புறம் கமுக்கமா ஒரு கட்டிங் உட்டுட்டு போய்டுவாரு.

அவர் யார் தெரியுமா? தெரியுமா? தெரியுமா? அவர்தான்!










சி( )ங்க மணியோட அப்பா!!!

எனக்கு பொண்ணு பாக்குறப்போ அவங்க வீட்டுல பொண்ணு இருக்கு கேப்போமான்னு கேட்டாங்க! எனக்கு அந்தாளு பொண்ணு கொடுக்க மாட்டார்னு நிச்சயமா நினைசேன்! ஆனா? அவர் ஜென்டில் மேன் ஓகே சொல்லிட்டாரு. இந்த லட்சணத்துல அவர் என்னை பார்ல பார்ப்பேன்னு வீட்டுல வேற சொல்லி இருக்காரு!



இப்போவெல்லாம் நான் அதிகம் குடிக்கிறது இல்ல வாரத்துல ஒரு நாள்தான் சனி,ஞாயிறு மட்டும் அதென்ன ஒருநாள் ஆனா சனி ஞாயிறு? அதாவது ஒரு வாரத்துல முதல் நாள் அடுத்த வாரத்துல கடைசிநாள்!

திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

அப்படி!!

வெளில எல்லாம் போய் அடிக்கிறது இல்ல வீட்டுலதான் சிங்க மணிகிட்ட திட்டு வாங்கிகிட்டே. இப்போ எனக்கு ஒரு சிக்கல் என்னன்னா என் பொண்ணுக்கு ஆறு வயசு ஆக போகுது இதுவரைக்கும் இருமல் மருந்துன்னு சொல்லிசமாளிசாச்சு! இனிமே அதுக்கு வெவரம் தெரிஞ்சுடும். இப்போ நான் என்ன பண்ணுறது எங்க வைச்சு அடிக்கிறது! ( பார்ல போய் அடிச்சா இப்போ இமேஜ் பிராப்ளம் அதோட வண்டி ஓடிக்கிட்டு வீட்டுக்கு வரணும் )

யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!



----------------------------------------------------------------




>

நான் ஹிந்து! நீ முஸ்லீம்! நாம் யார்?

நண்பர் புதுகை அப்துல்லா ஒரு பதிவு எழுதி இருக்கிறார்!
கிர்மினல்கள்
! கிர்மினல்களே! என்ற அந்த பதிவில் நேசமுடன் இஸ்லாம் என்ற பதிவரின் பதிவில் பெற்ற மகளை கற்பழித்த ஹிந்து தந்தை கைது. என்ற தலைப்பில் இடப்பட்டு இருந்த பதிவில் ''ஹிந்து தந்தை'' என்று மதத்தை குறிபிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், முஸ்லிம் தீவிர வாதிகள் என பொதுவில் கூறபடுவதால் மன வேதனையை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தன்னுடைய சிறந்த பதிவுகளில் ஒன்றான தீபாவளி நினைவுகள் பதிவினை மறுபதிவும் செய்து இருக்கிறார்! இதன் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும். நீர்,நிலம்,காற்று என அனைத்தையும் வரும் சந்ததிகளுக்கு மாசுபடுத்திக் குடுத்து விட்டோம். அந்த வரிசையில் மதத்தைச் சேர்க்காமல் இருக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருப்பதை மறவோம்.
இந்த கருத்தில் மேலும் உயர்ந்து நிற்கிறார்


எங்கள் ஊர் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகம் கலந்து வாழும் பகுதி! அங்கே எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உண்டு.சிறுவயதுமுதல் ஒரே குடும்பமாக பழகிய பல நட்புகளும் அங்கே உண்டு.தீபாவளி ,ரம்ஜான் எல்லாம் ஒன்றாக கொண்டாடி இருக்கிறோம். ரம்ஜான் பண்டிகையின் போது பண்டிகை காரர்கள் வீட்டில் இருக்கும் பட்சனங்களைவிட எங்கள் வீட்டில் அதிகம் இருக்கும்.எல்லா நண்பர்கள் வீட்டிலிருந்தும் பலகாரங்கள் வந்துவிடும். தீபாவளி சமயங்களில் அவர்கள் வீட்டிலும் அப்டித்தான்.




டேய்! போன தீபாவளிக்கு உங்க வீட்டுல செய்ஞ்ச தேங்காப்பார ரொம்ப நல்லா இருந்துச்சி இந்தவாட்டியும் அம்மாகிட்ட சொல்லி செய்யசொல்லு!! என இஸ்லாமிய நண்பனுக்கு பிடித்த பட்சணங்கள் ஹிந்து வீட்டில் செய்த சம்பவங்களும் உண்டு .



நட்பிற்குள் மதம் நுழையுமா ?

நல்ல உறுதியான,புரிந்துணர்வு கொண்ட எந்த ஒரு நட்பிற்குள்ளும் மதம் நுழைய முடியாது! எனக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான மிக நெருங்கிய நண்பன் இருக்கிறான் அவன் பெயர் இப்ராம்ஷா. இப்போது துபாயில் இருக்கிறான். என் எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்தவன் முக்கிய நேரங்களில் இடுக்கண் களைந்தவன்.


ஒரு சமயம் ஒரு நண்பனின் கட்டாய அழைப்பின் பேரில் ஒரு கூட்டத்திற்கு சென்றேன் அது ஒரு ஹிந்து மத அமைப்பின் கூட்டம். பழைய வரலாறுகள் பேசப்பட்டன, மன்னர்கால சம்பவங்கள் எடுத்துகூற பட்டன.முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்கள் முன்வைக்க பட்டன. இதுபோன்ற சம்பவங்களை மூளைசலவை என்று சொல்கிறார்கள்.சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்.



இவர்கள் சொல்லிய எந்த கருத்தும் என் இப்ராம்ஷா முன்னர் எடுபடவில்லை என் மூளையை அழுக்கடையாமல் சுத்தமாக சலவை செய்தது என் இப்ராம்ஷா வின் நட்புதான். இப்ராம்ஷா பற்றி இங்கு எழுதவே எனக்கு பெருமையாக இருக்கிறது.



இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஊருக்கு சென்று இருந்தேன் குடும்பத்துடன் .துபாயில் இருந்து இப்ராம்ஷாவும் வந்து இருந்தான்.எல்லோரும் குடும்பத்துடன் உற்சாகமாய் பேசி கொண்டுஇருந்தோம்.அப்போது பிரபல தொலைகாட்சியில் ஒரு செய்தி குண்டு வெடிப்பு பற்றி குண்டு வைத்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று செய்தி படிக்கிறார்கள்.இப்ராம்ஷா மனம் நொந்து போகிறான் வெளியில் காட்டி கொள்ளவில்லை.அவன் உற்சாகம் மறைந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுகிறான்.



எங்கோ யாரோ செய்கிற தவறிற்கு ஏன் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் என சொல்லவேண்டும். இதோ என் கண்முன்னே என் நண்பன் நொந்து போகிறான்!
இதே போல நல்ல நட்பு ஏதும் இல்லாத ஒரு தவறும் செய்யாத ஒரு இஸ்லாமியர் இதை பார்க்கும்போது அவருக்கு என்ன தோன்றும் இந்துக்கள் மேல் வெறுப்பும் தன்மதத்தின் பற்றும் அதிகரிக்காதா? சும்மா இருக்கும் ஒருவனை மதவாதியாக மாற்றுவதுயார்?

இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடுதானே இப்படி ஹிந்து தீவிரவாதி,முஸ்லிம் தீவிரவாதி,கிறித்தவ தீவிரவாதி என்று சொன்னால் சராசரி மக்களும் மதவாதி ஆகிவிடமாட்டார்களா? அந்த வார்த்தை இந்திய இறையான்மையை பாதிக்காதா ? இப்போது ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய நபர் ஒருவரை யாராவது அவர் ஜாதியை குறிப்பிட்டு பேசினாலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அப்படி இருக்க! வெகு சாதாரணமாக ஒரு மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொல்லி விடுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்.

நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!


.............................................................................................................................

...................................................................
>

தமிழ் நாட்டு தமிழர்களும், தமிழீழ தமிழர்களும் .......



தொப்புள் கொடி உறவுதான் நாங்கள்!

ஒருதாய் வயிற்றில் பிறக்கவில்லை!

ஆனால்!

தமிழ் தாய் வயிற்றில் பிறந்தோம்!!!


மதுக்கூர் க.ஆனந்தன்.



....................................







>

வேண்டாத குணங்கள் ??

ஒரு மனிதனின் வாழ்க்கை நிம்மதியாக இருக்க சில குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என சொல்ல படுகிறது. ஆசை, கோபம், எதிர்ப்பு உணர்வு, பழி வாங்கும் செயல், போன்ற குணங்கள் கொண்டவர்கள் நிம்மதி இழந்து தவிப்பார்களாம். ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கையா? வெற்றி கரமான வாழ்க்கையா? நிம்மதிக்கும் வெற்றிக்கும் இடைவெளி அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. நல்லவன் நிம்மதியாக இருக்கிறான், வல்லவன் வெற்றி அடைகிறான். நல்லவன் நல்லவன் என்றால்? வல்லவன் தீயவனா? அப்படி அல்ல! நல்லவன் ஒருவன் தீய குணங்கள் கொண்ட வல்லவனிடம் தோற்று போய்விட கூடாது.நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்.


ஆசை வேண்டும்!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொன்னார் அவர் சொன்னது நிம்மதியான வாழ்க்கைக்கு! ஆனால் வெற்றிகரமான வாழ்க்கைக்கு? ஆசையே எல்லாவிதமான இன்பத்திற்கும் அடிப்படை காரணம். ஆசை இல்லாதவன் அரை மனிதன்.ஆசையே வெற்றி தரும்.


கோபம் வேண்டும்!

கோபம் என்பது ஒரு சக்தி! கோபம் என்பது ஒரு ஆற்றல்! ரவுத்திரம் பழகு எனஏன் சொன்னார்கள்? கோபம் அணைக்கட்டில் நிரம்பி இருக்கும் நீரை போன்றதுஅதை முறையாக வெளிப்படுத்தினால் விவசாயம் செய்யலாம். கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


எதிரி வேண்டும்!

உனக்கு நூறு நண்பர்கள் இருக்கிறார்களா அது குறைவு! உனக்கு ஒரு எதிரி இருக்கிறானா? அது அதிகம்! இது பழைய பழமொழி! ஆனால்? வெற்றிகரமான வாழ்க்கைக்கு? எதிரிகள் வேண்டும்! கவிஞர் வைரமுத்து சொன்னது போல, எதிர்ப்புகள் வாழ்க்கையின் பிடிமானங்கள்! எதிரி என்று உனக்கு யாரும் இல்லையெனில் எதிரியை ஏற்படுத்திகொள். உன்னை உனக்கு உணர்த்துவது. உன் எதிரிதான்.

நண்பர்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால்? எதிரி இல்லாமல் வளர முடியாது!

பழி வாங்கும் உணர்வு வேண்டும்!

எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயம் அவன் வறுமை காரணமாகவோ அவன் இயலாமை காரணமாகவோ அவமான பட்டு இருப்பான்அல்லது உதாசீனபடுத்த பட்டு இருப்பான். அப்படி அவன் இகழ படும்போது அவன் தன்னை இகழ்ந்தவர்களை பழிவாங்கும் உணர்வோடு எதிர் கொள்ள வேண்டும். பழிவாங்குதல் என்றால் தன்னை இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா? இல்லை! அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான்.


வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு சவால் இருந்து கொண்டேஇருக்க வேண்டும் .




>

என் கேமராவில்..

கத்தரி கோல் கைல இருந்தா எதையாவது வெட்டிகிட்டே இருப்போம். பேனா கைல இருந்தா எதையாவது கிறுக்கிகிட்டே இருப்போம். அதுமாதிரி இப்போ செல்போன் கேமரா வந்ததுல இருந்து எதையாவது போட்டோ புடிக்க ஆசை வருதுஅந்தமாதிரி செல் போன்ல எடுத்த சில போட்டோக்கள்.

இந்த வாட்டி சபரிமலை போயிட்டு திரும்பி வரும்போது மணப்பாரைகிட்ட சாப்பிட வண்டிய நிப்பாட்டினோம்.அங்கதான் இவர பார்த்தேன் அங்க இவர் பெக்கரா இருக்காரு.இவர பாக்கும்போது காதல் படத்துல கடசில வர்ற பரத் தான்
நினைவுக்கு வந்தாரு.

இவர நேரா ஒரு போட்டோ புடிக்க சுத்தி சுத்தி வந்தேன் கடசில அவரே வந்து மாட்டினார்.

போன தை பூசம் அன்னிக்கு வெளில போயிட்டு செங்குன்றம் புழல் ஏரி வழியா வந்தோம். சாயங்கால நேரம் ஏரி சும்மா பார்த்துட்டு போகலாம்னு ஏரி கரைமேல ஏறி பார்த்தோம். சூரிய அஸ்தமனம். ஒருகைல செல்போன் மறுகையால சூரியன புடிச்சா மாதிரி .....



மெழுகுவர்த்தி வெளிச்சத்துல என் பெரிய பொண்ணு
அமிர்த
வர்ஷினி.


ராம லட்சுமி அம்மா நிழல்ல எடுத்த போட்டோவெல்லாம் போட்டு ஒரு பதிவு போட்டு இருந்தாங்க. அந்த பதிவு பின்னுட்டத்துல என்னையும் போட்டோ புடிக்க
சொல்லி தைரியம் கொடுத்தாங்க. (என்ன தைரியத்துல போட்டோ புடிச்சு அத பதிவுல வேற போடுறன்னு யாரும் கேக்க கூடாதுல்ல ) அதான். இந்த நிழல் போட்டோ என் ரெண்டாவது பொண்ணு
அட்சய
நந்தினி!


.................................................................

>