''தங்க நகை வாங்க போறீங்களா?''

சமீபத்தில் மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார்கள் அதில்,அவர் கத்தாரில்நகை வாங்கியதாகவும் அந்த நகைக்கு கூலியாக ஏழு சதவீத தொகை மட்டும் மேற்கொண்டு கொடுத்ததாகவும்,ஆனால் நம்நாட்டில் நகை வாங்கும்போது கூலி,சேதாரம் எல்லாம் சேர்த்து மொத்தம் பதினாறு
சதவீதம்போடப்பட்டதாக சொல்லி இருந்தார். அவரின் அந்த பதிவிற்கும்அந்த பதிவில் இடப்பட்டு இருந்த பின்னுட்டங்களுக்கும் நகைதொழில் செய்பவன் என்ற முறையில்விளக்கங்கள் அளிக்க இந்த பதிவு.

''மேலும் நகை தொழில் பற்றியும் நகை வாங்கும்
போது ஏமாறாமல் இருக்கவும் சில தகவல்கள்''


சில வகை நகைகளுக்கு உற்பத்தி செலவு மிக குறைவு அதாவது இயந்திரத்தில் உருவாக்க படுபவை.சில வகை டாலர்கள்,சிலவகை மோதிரங்கள்,சிலவகை செயின்கள். இதுபோன்ற நகைகளை குறைந்த கூலியில் வாங்க சாத்தியம்
உண்டு. 


91.6 kdm நகையாக இருந்து, எல்லாவகை
நகைகளுக்கும் 7 சதவீதம் மட்டும் கூலி
கொடுத்து வாங்கும் நிலை இருந்தால்
கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்
எல்லாவகை நகைகளும் அந்த கூலியில்
கிடைக்கிறதா என தெரியவில்லை.

ஏனெனில் இங்கே நகை செய்பவருக்கே 4-8
சதவீதம் நகையின் தன்மையை பொறுத்து
கூலியாக கிடைக்கிறது.

திரு,இராகவன் அவர்களின் பதிவு
91.6 என்றால் என்ன ?
kdm என்றால் என்ன ?
சேதாரம் எப்படி ஏற்படுகிறது ?
ஒருநகை எப்படி உருவாக்க படுகிறது?
நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய
விஷயங்கள் என்ன ?

இவற்றையெல்லாம் பற்றி சில நாட்களுக்கு
முன்னர் புழுதிக்காடு சிம்பாவின் ஒரு பதிவில்
சொல்லி இருந்தேன் அந்த பதிவு

சேதாரம் என்பதைப்பற்றி ஒரு முழு விளக்கம்
பரம்பரையாக நகை தொழில் செய்யும் குடும்பம்  எங்களுடையது எங்கள் முன்னோர்கள் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தனர் ஒரு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அனைவருக்கும் நகை செய்வதுதான் தொழில்.பின்னர் அந்த கிராமத்திலிருந்து குடி பெயர்ந்து பக்கத்து நகரத்துக்கு வந்து விட்டனர். நான் சிறுவனாக இருந்த போது அந்த கிராமத்தில் கண்ட ஒரு காட்சி! அங்கே முன்னோர் வசித்த வீடுகள் எல்லாம் பாழடைந்து சிதைந்து இடிந்த நிலையில் காணப்பட்டது.எல்லாம் மண் வீடுகள் . அங்கே சிலர் கும்பலாக அமர்ந்து
அந்த வீடுகளில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து அந்த மண்ணை அலசி கழுவி தங்கம் எடுத்து கொண்டு இருந்தனர். அதுவும் எப்படி ? பக்கத்தில் ஒரு குளம் அந்த குளத்தில் இருந்து கால்வாய் வெட்டி தண்ணீரை கொண்டுவந்து
மண் அலசி கொண்டு இருந்தனர். மாதக்கணக்கில் தங்கி இவ்வாறு
செய்கிறார்களாம்.

நகை தொழில் செய்த போது ஏற்பட்ட சேதாரத்தை தான் இவர்கள் அலசி எடுத்து கொண்டு இருந்தனர். அதே சமயம் அந்த வீட்டு உரிமையாளருக்கு சிறிய அளவு தொகை கொடுத்து விடுவார்கள். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் நகை தொழிலில் சேதாரம் ஆவதை தவிர்க்கவே முடியாது என்பதை சொல்லத்தான்.

அதே சமயம் திரு,இராகவன் அவர்கள் தன் பின்னுட்டத்தில்
//பொற்கொல்லர்கள் தங்கத்தை கழுவிய நீரை கூட
சாக்கடையில் கொட்டமாட்டார்கள் ,அதை காய்ச்சி
அதில் இருந்தும் தங்கத்தை எடுத்து விடுவார்கள்
என கேள்விப்பட்டு இருக்கிறேன் விசாரித்து
சொல்லுங்கள்//

என்று கூறி இருந்தார் அதாவது அவர் கூறி இருப்பதன்
கருத்து என்ன?

நகை தொழில் செய்பவர்கள் ஏற்படும் சேதாரம் எல்லாத்தையும் எடுத்து விடுகிறார்கள் அப்படி சேதாரம் என்று தனியாக ஏன் வாங்க வேண்டும்
என்பதுதான்?

முடிந்த வரை இழப்புகளை எடுக்க முடியும் ஆனால் முழுமையாக எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

அதற்க்கு மேலே நான் சொன்ன எங்கள் முன்னோர் கிராமத்தில்
நடந்த செயலே சாட்சி!

சரி! அது அந்த காலம் நவீன தொழில் நுட்பங்கள் ஏதும்
இருந்து இருக்காது அதனால் சேதாரம் ஏற்பட்டு இருக்கும்
இன்றுமா அப்படி என கேட்கலாம்?


ஆமாம்!!! இன்றும் அப்படிதான் இப்போது நகை தொழில் செய்யும் கடைத்தெருவை அந்த கடை வாசலை தினமும் பெருக்கி எடுத்து செல்ல ஒரு கும்பலே இருக்கிறது.

இதை அவர்கள் என் ஏரியா உன் ஏரியா என பிரித்து வைத்து கொள்கிறார்கள்!
மேலும் கோவை பகுதியில் தினமும் ஒரே இடத்தில் சாக்கடையை கழுவி தங்கம் எடுப்பதை இப்போதும் பார்க்கலாம். சேதாரம் ஏற்படவில்லை என்றால்
சாக்கடையில் எப்படி தங்கம் கிடைக்கும்..

நகை தொழிலாளருக்கு சேதாரம் கொடுக்கப்படுகிறதா?
தற்போது பெரும்பாலும் பொற்கொல்லரிடம் நகை  செய்வதை விட நகைகடைகளிலேயே அதிகம்பேர் நகை வாங்குகின்றனர். நகை செய்யும் தொழிலாளருக்கு சேதாரம் ஏதும் கொடுக்க படுவது கிடையாது
தொழிலாளருக்கு கிடைக்கும் அவருக்குண்டான கூலியான நகையின் வகையை பொறுத்து நான்கு முதல் எட்டு சதவீத கூலியில் அவர்
இழப்பு அடக்கம்.

''தொன்று தொட்டு பழகிவிட்ட சேதாரம் என்ற
சொல் நியாயமாக கிடைக்கவேண்டிய நகை
தொழிலாளருக்கு கிடைக்காமல்
நகைகடைகாரர்களுக்கு லாபத்தை
ஈட்டி தருகிறது''

அதேசமயம் நகை கடைகாரர்களுக்கும் சிக்கல் இல்லாமல் இல்லை. ஒரு நகை தொழிலாளியிடம் உருவாகும் நகையானது பல வியாபார நிலைகளை
தாண்டித்தான் நகை கடைக்கு வருகிறது.அப்போது அதன் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது.

ஒரு விவசாயி ஒரு விளை பொருளை
வயலில் உழுது நீர்பாய்ச்சி உரம்போட்டு
உற்பத்தி செய்கிறார் அந்த பொருளுக்கு
அவருக்கு கிடைக்கும் விலைக்கும்
சந்தையில் விற்கப்படும் விலைக்கும்
எவ்வளவு வித்தியாசம் உள்ளது?

ஒரு சட்டை தைக்க இன்றைக்கு தையல்
காரருக்கு நூறு ரூபாய்வரை கொடுக்கிறோம்
அதேசமயம் சட்டையே நூறு ரூபாய்க்கு
கிடைக்கிறது.

பிளாட்பார கடைகளில் இருநூறு ரூபாய்க்கு
கிடைக்கும் அதே பொருள் பெரிய ஷோரூம்களில்
நானூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாம் பெரிய கடைகளை தேடி போகும்போது
அந்தகடை ''ஏசி'' மற்றும் அவர்களின் விளம்பர
செலவு எல்லாம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.


''நகை வாங்கும்போது மக்கள் எப்படி ஏமாற்ற படுகிறார்கள்''நகை தொழில் செய்து கொண்டு நகை
தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலி பற்றி
நான் விமர்சனம் செய்ய சில சமரசங்களை செய்ய
வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த தொழிலில்
யாராவது மோசடி செய்தால் அதை எடுத்து சொல்ல
எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

தொழில் ரகசியம்.

எல்லா தொழிலிலும் ரகசியங்கள் உண்டு அந்த
தொழில் ரகசியம் என்பது மக்களின் வாங்கும் திறனை
அதிகப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்
மக்களை ஏமாற்ற அது பயன்படுத்த பட கூடாது!!


இப்போது சில அல்லது பல இடங்களில்

91.6 என்ற முத்திரை மட்டும் இடப்பட்டு தரம் குறைந்த
நகை விற்பனை செய்ய படுகிறது. இந்த விசயத்தில்
நகை வாங்குபவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
ஒரு நகை வாங்கினால் அதை திரும்ப விற்கும் போது
நீங்கள் வாங்கும்போது அந்த நகைக்கு மேற்கொண்டு
கொடுத்த கூலி ,சேதம் மட்டுமே குறையவேண்டும்.
அதற்குமேல் குறையக்கூடாது. இந்த உத்திரவாதத்தை
அந்த நகைகடையில் பெற்று கொள்ளவேண்டும்.
சென்னை,மதுரை,கோவை போன்ற நகரங்களில்
இருபத்து ஐந்து ரூபாய் செலவில் உங்கள் நகையை
சோதித்து கொள்ளும் வசதி உள்ளது.


91.6 kdm நகைகளை மட்டும் வாங்குங்கள்
ஏமாற்றத்தை தவிருங்கள்!!



(மேலும் நகை வாங்குவது பற்றி பின்னுட்டத்தில்
கேளுங்கள் பதில் அளிக்கிறேன் )

...................................................................

>

72 comments:

அ.மு.செய்யது said...

நல்ல பயனுள்ள பதிவு ஜீவன்...

ஜொலிக்கிறது..

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்

இராகவன் நைஜிரியா said...

முதல்ல இடத்த போட்டாச்சு
இனிமேத்தான் படிக்கணும்

ஜியா said...

தங்க நகைகளப் பத்தி அருமையா எழுதிருக்கீங்க... வாழ்த்துக்கள்...

என்னுடைய நண்பர் ஒருவரும் நகை தொழிச் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் அமெரிக்காவில் சில காலம் தங்கிருந்த போது, யார் ஊருக்குச் சென்றாலும், அவர்களிடம் இங்கிருந்து தங்கம் வாங்கி அனுப்பி வைப்பார். இத்தனைக்கும் தங்கத்தின் விலை இந்தியாவிற்கும் இங்கும் எதுவும் வித்தியாசம் இருப்பதில்லை. காரணம் கேட்டால், இங்குள்ள தங்கம் சுத்தமாக இருக்கும், சேதாரம் அவ்வளவு ஆகாது என்பார். இதைப் பற்றி உங்க கருத்து??

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜீவன்.

நீங்கள் சொல்வது சரிதான்.

ஒரு சராசரி மனிதனாகத்தான் நான் இதை கம்பேர் செய்து பார்த்தேன்.

மேலும் 7% சதவீதம் கொடுக்கவில்லை. நான் கொடுத்தது 7 ரியால் ஒரு கிராமுக்கு. இது தங்கச் சங்கிலிக்கு மட்டும்தான் இவ்வளவு என்றும், மற்றவற்றிக்கு 5 ரியால் என்றும் சொன்னார்கள்.

நான் வாங்கும்போது ஒரு கிராமின் விலை 100 ரியால் என்று இருந்ததால், அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது என நினைக்கின்றேன்.

தங்கள் விளக்கங்கள் சரியாக இருக்கின்றன. ஒரு சந்தேகம், தங்கத்தின் விலையில் மற்ற இடங்களை விட 35 ரூபாய் குறைவு என்று விளம்பரம் செய்து, பின்னர் 16% - 18%(எல்லா விதமான நகைக்களுக்கும்) போடுகின்றார்களே அது சரியா?

இராகவன் நைஜிரியா said...

எனக்கு மேலும் ஒரு சந்தேகம்..

சிறு வயதில் நான் கும்பகோணத்தில் இருக்கும் போது, எங்கள் குடும்பத்திற்கு ஒரு பொற்கொல்லர் இருந்தார்.. அவர் எப்போதும் 1 பவுனுக்கு 1 கிராம் தான் சேதாரம் போடுவார் - அதாவது 12.5% வருகின்றது. அப்போது என் தந்தையிடம் அவர் சொல்லுவது, இது கையால் செய்யப் படுவது, மிஷின் கட்டிங் என்றால் இன்னும் குறையும் என்பார்.

இது சரியா என்று சொல்லுங்க...

இராகவன் நைஜிரியா said...

// (மேலும் நகை வாங்குவது பற்றி பின்னுட்டத்தில்
கேளுங்கள் பதில் அளிக்கிறேன் )//

அண்ணே... தங்ஸ் இப்பவே ஒரு லிஸ்ட் வச்சு இருக்காங்க...

இப்ப நீங்க வேற சொல்லிட்டீங்களா... ஜூலை மாசம் சென்னை வரேன்.. அட்ரஸ் குடுங்க, நகை வாங்கணும்

எம்.எம்.அப்துல்லா said...

//மேலும் கோவை பகுதியில் தினமும் ஒரே இடத்தில்
சாக்கடையை கழுவி தங்கம் எடுப்பதை இப்போதும்
பார்க்கலாம். சேதாரம் ஏற்படவில்லை என்றால்
சாக்கடையில் எப்படி தங்கம் கிடைக்கும்..
//

உண்மைதான் அப்பு. புதுகையில் நகைக்கடை நிறைந்த நெல்லுமண்டித்தெருவில் உள்ள சாக்கடையில் இன்றும் தங்கம் அலசிச் சேகரிப்பதைப் பார்க்கலாம்.

நட்புடன் ஜமால் said...

அண்ணேன் நல்ல பகிர்வு

முழுசா படிச்சிட்டு அப்பாலிக்கா வாறேன்

புதியவன் said...

தங்க நகை பற்றி ஏதும் அறியாத எனக்கு இந்தப் பதிவைப் படித்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் தகவல்களுக்கு நன்றி ஜீவன் அண்ணா...

தமிழ் அமுதன் said...

/// அ.மு.செய்யது said...

நல்ல பயனுள்ள பதிவு ஜீவன்...

ஜொலிக்கிறது..///

நன்றி ....செய்யது

தமிழ் அமுதன் said...

/// இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்///


;;)) ஜஸ்டு மிஸ்

தமிழ் அமுதன் said...

/// இராகவன் நைஜிரியா said...

முதல்ல இடத்த போட்டாச்சு
இனிமேத்தான் படிக்கணும்///
;;;)))

தமிழ் அமுதன் said...

/// ஜி said...

தங்க நகைகளப் பத்தி அருமையா எழுதிருக்கீங்க... வாழ்த்துக்கள்...

என்னுடைய நண்பர் ஒருவரும் நகை தொழிச் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் அமெரிக்காவில் சில காலம் தங்கிருந்த போது, யார் ஊருக்குச் சென்றாலும், அவர்களிடம் இங்கிருந்து தங்கம் வாங்கி அனுப்பி வைப்பார். இத்தனைக்கும் தங்கத்தின் விலை இந்தியாவிற்கும் இங்கும் எதுவும் வித்தியாசம் இருப்பதில்லை. காரணம் கேட்டால், இங்குள்ள தங்கம் சுத்தமாக இருக்கும், சேதாரம் அவ்வளவு ஆகாது என்பார். இதைப் பற்றி உங்க கருத்து??///


வாங்க ஜி ! உண்மைதான் வெளிநாடுகளில் கிடைக்கப்படும் தங்கத்தின்
தூய்மை தன்மை 99.99 என்ற அளவில் இருக்கும்.இங்கே கிடைக்கும் தங்கத்தின்
தூய்மை 99.70 அளவிலேயே இருந்தது.அதனால் வெளிநாடுகளில் இருந்து
கிடைக்கும் தங்கத்தையே நகை தொழில் செய்பவர்களும் விரும்பினார்கள்.

ஆனால் இப்போது வங்கிகளில் கிடைக்கும் தங்கம் வெளிநாட்டு தங்கத்திற்கு
இணையாக இருப்பதாக அறிகிறேன்!!

தமிழ் அமுதன் said...

////இராகவன் நைஜிரியா

தங்கள் விளக்கங்கள் சரியாக இருக்கின்றன. ஒரு சந்தேகம், தங்கத்தின் விலையில் மற்ற இடங்களை விட 35 ரூபாய் குறைவு என்று விளம்பரம் செய்து, பின்னர் 16% - 18%(எல்லா விதமான நகைக்களுக்கும்) போடுகின்றார்களே அது சரியா?///

அது ஒரு விளம்பர யுக்தி மட்டுமே! மற்ற இடங்களில் உள்ளது போலவே
இந்த விளம்பரம் செய்யும் கடையில் விற்பனை செய்ய படுகிறது.
மேலும் இப்போது சில இடங்களில் 25% கூலி சேதம் போடப்படுகிறது.

தமிழ் அமுதன் said...

//// இராகவன் நைஜிரியா said...

எனக்கு மேலும் ஒரு சந்தேகம்..

சிறு வயதில் நான் கும்பகோணத்தில் இருக்கும் போது, எங்கள் குடும்பத்திற்கு ஒரு பொற்கொல்லர் இருந்தார்.. அவர் எப்போதும் 1 பவுனுக்கு 1 கிராம் தான் சேதாரம் போடுவார் - அதாவது 12.5% வருகின்றது. அப்போது என் தந்தையிடம் அவர் சொல்லுவது, இது கையால் செய்யப் படுவது, மிஷின் கட்டிங் என்றால் இன்னும் குறையும் என்பார்.

இது சரியா என்று சொல்லுங்க...////


மெசின் கட்டிங் எனப்படுவது.. செய்து முடிக்கப்பட்ட மோதிரம்,வளையல்,டாலர்
செயின் போன்றவற்றின் மீது பட்டை தீட்டுதல் ஆகும்.நீங்கள் பார்த்து இருக்கலாம்
சில மோதிரங்கள் மீது பள,பள என இருக்கும்.முன்பு இந்த பட்டை தீட்டுதல்
கைகளால் செய்யப்பட்டது.இப்போது மெசினில் செய்யப்படுகிறது.இந்த மெசின்
புழக்கத்தில் வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

எல்லாவகை நகையிலும் மெசின் கட்டிங் செய்ய முடியாது!
மேலும் உங்கள் கேள்வியை பார்க்கும் போதுஅந்த பொற்கொல்லர்
சொல்லி இருப்பதன் பொருள் வேறு வகையில் இருந்திருக்க கூடும்.

தமிழ் அமுதன் said...

/// இராகவன் நைஜிரியா said...

// (மேலும் நகை வாங்குவது பற்றி பின்னுட்டத்தில்
கேளுங்கள் பதில் அளிக்கிறேன் )//

அண்ணே... தங்ஸ் இப்பவே ஒரு லிஸ்ட் வச்சு இருக்காங்க...

இப்ப நீங்க வேற சொல்லிட்டீங்களா... ஜூலை மாசம் சென்னை வரேன்.. அட்ரஸ் குடுங்க, நகை வாங்கணும்///

வாங்கண்ணே! வாங்க! கண்டிப்பா வாங்கித்தரேன்

எல்லாவிதமான நகைகளையும் 10% கூலியில் வாங்கி தருகிறேன்!
அதோடு இது 91.6 kdm நகைதான் என்று ''டெஸ்டிங் ரிப்போர்டையும்''
கூடவே தருகிறேன்.

தமிழ் அமுதன் said...

/// எம்.எம்.அப்துல்லா said...

//மேலும் கோவை பகுதியில் தினமும் ஒரே இடத்தில்
சாக்கடையை கழுவி தங்கம் எடுப்பதை இப்போதும்
பார்க்கலாம். சேதாரம் ஏற்படவில்லை என்றால்
சாக்கடையில் எப்படி தங்கம் கிடைக்கும்..
//

உண்மைதான் அப்பு. புதுகையில் நகைக்கடை நிறைந்த நெல்லுமண்டித்தெருவில் உள்ள சாக்கடையில் இன்றும் தங்கம் அலசிச் சேகரிப்பதைப் பார்க்கலாம். ///

வாங்க அப்பு!! வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி!!!!

தமிழ் அமுதன் said...

/// நட்புடன் ஜமால் said...

அண்ணேன் நல்ல பகிர்வு

முழுசா படிச்சிட்டு அப்பாலிக்கா வாறேன்//

வாங்க! ஜமால்! வாங்க!

தமிழ் அமுதன் said...

/// புதியவன் said...

தங்க நகை பற்றி ஏதும் அறியாத எனக்கு இந்தப் பதிவைப் படித்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் தகவல்களுக்கு நன்றி ஜீவன் அண்ணா...///



மிக்க நன்றி புதியவன்!! வருகைக்கும் கருத்துக்கும்!!

அமுதா said...

நல்ல பதிவு. நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன். (ஆனால் , தங்கம் விலை தான் ரொம்ப ஏறிப்போச்சு..)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பயனுள்ள பதிவுக்கு நன்றி ஜீவன்.

3 நாட்களுக்கு முன்னால், தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு கிராம் மோதிரம் வாங்கினேன். அதற்கு அவர்கள் போட்ட சேதாரம் 10%. 1 கிராமுக்கு இவ்வளவு சேதாரம் ஆகுமா.?

அப்புறம் சில நகைக் கடைகள்,1 கிராமுக்கு 40, 50 ரூபாய் தள்ளுபடி தருகிறார்களே இது எதன் அடிப்படையில். எப்படி இவர்களால் நிர்ணயித்த விலையை விட குறைவாக தரமுடிகிறது.

மேலும் வெள்ளி நகைகளுக்கு இதுபோன்று எதுவும் வாங்குவதில்லை. எடைக்கு கிராம் கணக்கு போட்டு தந்துவிடுகிறார்களே எப்படி?

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்கண்ணே! வாங்க! கண்டிப்பா வாங்கித்தரேன்

எல்லாவிதமான நகைகளையும் 10% கூலியில் வாங்கி தருகிறேன்!
அதோடு இது 91.6 kdm நகைதான் என்று ''டெஸ்டிங் ரிப்போர்டையும்''
கூடவே தருகிறேன்.

அட்ரா அட்ரா
இதுக்கு சர்வீஸ் சார்ஜ் ஃப்ரீயா.

அப்துல்மாலிக் said...

ரொம்ப பயனுள்ள பதிவு அண்ணே

அப்துல்மாலிக் said...

ஊரில் வாங்கும் நகைகள் 18காரட் என்று வெளிநாடுகளில் (கல்ஃப்) சொல்கிறார்கள், அதுலே அவர்கள் அதை நிரூபிக்கிறார்கள்

அதே கருத்தை ஊரில் வாங்கிய இடத்தில் கேட்டால் யார் சொன்னது என்று அடிக்க வருகிறார்கள், எதைதான் நம்புவது

அப்துல்மாலிக் said...

வெளிநாடுகளில் வாங்கும் நகை ரொம்ப பளபளப்பா இருக்கும், அதே உள்ளூரில் வாங்கினால் இருப்பதில்லை, என்ன காரணம்

உள்ளூரில் உள்ள நகைவியாபாரிகள் வெளிநாட்டில்வாங்கியதை விரும்பி வாங்குவதுகூட இதை நிருபிப்பதாக இருக்கிறது...

தமிழ் அமுதன் said...

// அமுதா said...

நல்ல பதிவு. நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன். (ஆனால் , தங்கம் விலை தான் ரொம்ப ஏறிப்போச்சு..)///


நன்றி!! ஆமாம் விலை ரொம்பதான் ஏறிபோச்சு!!

தமிழ் அமுதன் said...

//// அமிர்தவர்ஷினி அம்மா said...

பயனுள்ள பதிவுக்கு நன்றி ஜீவன்.

//// 3 நாட்களுக்கு முன்னால், தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு கிராம் மோதிரம் வாங்கினேன். அதற்கு அவர்கள் போட்ட சேதாரம் 10%. 1 கிராமுக்கு இவ்வளவு சேதாரம் ஆகுமா.?////

ஒரு நகை உருவான இடத்திலிருந்து நகைகடைக்கு பல வியாபார நிலைகளை தாண்டி வருகிறது, உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது.


//// அப்புறம் சில நகைக் கடைகள்,1 கிராமுக்கு 40, 50 ரூபாய் தள்ளுபடி தருகிறார்களே இது எதன் அடிப்படையில். எப்படி இவர்களால் நிர்ணயித்த விலையை விட குறைவாக தரமுடிகிறது.////

இது வெறும் விளம்பர தந்திரம் குறைப்பதுபோல குறைத்து வேறுவகையில்
வாங்கி விடுவார்கள்.



///மேலும் வெள்ளி நகைகளுக்கு இதுபோன்று எதுவும் வாங்குவதில்லை. எடைக்கு கிராம் கணக்கு போட்டு தந்துவிடுகிறார்களே எப்படி?///

வெள்ளி வாங்கும் போது அதன் விலை பற்றி யாரும் அதிகம் கவனிப்பது இல்லை.
கவனித்து வாங்கினால் புரியும்.

தமிழ் அமுதன் said...

/// அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்கண்ணே! வாங்க! கண்டிப்பா வாங்கித்தரேன்

எல்லாவிதமான நகைகளையும் 10% கூலியில் வாங்கி தருகிறேன்!
அதோடு இது 91.6 kdm நகைதான் என்று ''டெஸ்டிங் ரிப்போர்டையும்''
கூடவே தருகிறேன்.

அட்ரா அட்ரா
இதுக்கு சர்வீஸ் சார்ஜ் ஃப்ரீயா.////


நம்ம பேச்ச நம்பி நம்மகிட்ட யாரும் நகை வாங்கி தர சொல்லி கேட்டா, அதுவே ஒரு
வெகுமதிதான் இதுல சர்விஸ் சார்ஜ் வேறயா? ;;;))))

அப்துல்மாலிக் said...

//ஜீவன் said...
/// அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்கண்ணே! வாங்க! கண்டிப்பா வாங்கித்தரேன்

எல்லாவிதமான நகைகளையும் 10% கூலியில் வாங்கி தருகிறேன்!
அதோடு இது 91.6 kdm நகைதான் என்று ''டெஸ்டிங் ரிப்போர்டையும்''
கூடவே தருகிறேன்.

அட்ரா அட்ரா
இதுக்கு சர்வீஸ் சார்ஜ் ஃப்ரீயா.////


நம்ம பேச்ச நம்பி நம்மகிட்ட யாரும் நகை வாங்கி தர சொல்லி கேட்டா, அதுவே ஒரு
வெகுமதிதான் இதுல சர்விஸ் சார்ஜ் வேறயா? ;;;))))
//

ஆஹா... கலக்கிட்டீங்கண்ணாத்தே..
வருவோம்லே.....!அப்புறம் யாருனு கேட்டுபுடமாட்டீகளே

தமிழ் அமுதன் said...

/// said...

ரொம்ப பயனுள்ள பதிவு அண்ணே///

நன்றி அபுஅஃப்ஸர்!!

///ஊரில் வாங்கும் நகைகள் 18காரட் என்று வெளிநாடுகளில் (கல்ஃப்) சொல்கிறார்கள், அதுலே அவர்கள் அதை நிரூபிக்கிறார்கள்

அதே கருத்தை ஊரில் வாங்கிய இடத்தில் கேட்டால் யார் சொன்னது என்று அடிக்க வருகிறார்கள், எதைதான் நம்புவது///

நீங்கள் வாங்கும் போது 91.6 kdm நகை மட்டும் கேட்டு வாங்கினால் இந்த சிக்கல் வராது!!


////வெளிநாடுகளில் வாங்கும் நகை ரொம்ப பளபளப்பா இருக்கும், அதே உள்ளூரில் வாங்கினால் இருப்பதில்லை, என்ன காரணம்

உள்ளூரில் உள்ள நகைவியாபாரிகள் வெளிநாட்டில்வாங்கியதை விரும்பி வாங்குவதுகூட இதை நிருபிப்பதாக இருக்கிறது.///

அப்படி அல்ல! எல்லாம் ஒன்றுதான் வெளி நாடுகளில் சில தொழில் நுட்பத்தினால் அப்படி தோன்றலாம்.இப்போது எல்லா தொழில் நுட்பமும் இங்கும் வந்து விட்டது.
மேலும் வியாபாரிகள் வெளி நாட்டு நகையை வாங்க காரணம் அங்கே முழுக்க முழுக்க 91.6 kdm நகைகள் இருப்பதே காரணம்.

தமிழ் அமுதன் said...

/// அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்கண்ணே! வாங்க! கண்டிப்பா வாங்கித்தரேன்

எல்லாவிதமான நகைகளையும் 10% கூலியில் வாங்கி தருகிறேன்!
அதோடு இது 91.6 kdm நகைதான் என்று ''டெஸ்டிங் ரிப்போர்டையும்''
கூடவே தருகிறேன்.

அட்ரா அட்ரா
இதுக்கு சர்வீஸ் சார்ஜ் ஃப்ரீயா.////


நம்ம பேச்ச நம்பி நம்மகிட்ட யாரும் நகை வாங்கி தர சொல்லி கேட்டா, அதுவே ஒரு
வெகுமதிதான் இதுல சர்விஸ் சார்ஜ் வேறயா? ;;;))))

February 17, 2009 3:21 AM
Delete
Blogger அபுஅஃப்ஸர் said...

//ஜீவன் said...
/// அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்கண்ணே! வாங்க! கண்டிப்பா வாங்கித்தரேன்

எல்லாவிதமான நகைகளையும் 10% கூலியில் வாங்கி தருகிறேன்!
அதோடு இது 91.6 kdm நகைதான் என்று ''டெஸ்டிங் ரிப்போர்டையும்''
கூடவே தருகிறேன்.

அட்ரா அட்ரா
இதுக்கு சர்வீஸ் சார்ஜ் ஃப்ரீயா.////


நம்ம பேச்ச நம்பி நம்மகிட்ட யாரும் நகை வாங்கி தர சொல்லி கேட்டா, அதுவே ஒரு
வெகுமதிதான் இதுல சர்விஸ் சார்ஜ் வேறயா? ;;;))))
//

//// ஆஹா... கலக்கிட்டீங்கண்ணாத்தே..
வருவோம்லே.....!அப்புறம் யாருனு கேட்டுபுடமாட்டீகளே////


வாங்க அப்பு! யாருன்னு எல்லாம் கேக்க மாட்டேன் வாங்க!

குடந்தை அன்புமணி said...

நல்ல பதிவு. நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.

மங்கை said...

நல்ல பதிவு அமுதன்...பயனுள்ள தகவல்கள்....

இராகவன் நைஜிரியா said...

அண்ணே.. தங்கம் விலை 11,000 க்கு மேல் போய்விட்டதே...

நம்ம மாதிரி உள்ளவங்களுக்கு தங்கம் இனி எட்டாக்கனிதான் நினைக்கின்றேன்.

Anonymous said...

அன்பு நண்பர் ஜீவன் ,
நலமாக இருக்கீங்களா நான் கோவையில் நகை தொழில் செய்யும் நபர்.கடந்த 18 வருடங்களாக பெரிய கடை வீதியில் நகை தொழில் புரிகிறேன் .நீங்களும் ஒரு நகை தொழில் புரிபவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நகை தொழில் புரிபவர் படும் கஷ்டங்கள் பற்றியும் தயவு செய்து ஒரு பதிவு எழுதவும் .நான் தற்சமயம் ஆன்லைன் வர்த்தகம் செய்கிறேன் .சிம்பா ,சாய் சார் எல்லோரும் என் நண்பர்கள்.உங்களிடம் நட்பு கொள்ள ஆசை படுகிறேன் ,

Anonymous said...

அன்பு நண்பர் ஜீவன் ,
நலமாக இருக்கீங்களா நான் கோவையில் நகை தொழில் செய்யும் நபர்.கடந்த 18 வருடங்களாக பெரிய கடை வீதியில் நகை தொழில் புரிகிறேன் .நீங்களும் ஒரு நகை தொழில் புரிபவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நகை தொழில் புரிபவர் படும் கஷ்டங்கள் பற்றியும் தயவு செய்து ஒரு பதிவு எழுதவும் .நான் தற்சமயம் ஆன்லைன் வர்த்தகம் செய்கிறேன் .சிம்பா ,சாய் சார் எல்லோரும் என் நண்பர்கள்.உங்களிடம் நட்பு கொள்ள ஆசை படுகிறேன் ,

Anonymous said...

அன்பு நண்பர் ஜீவன் ,
நலமாக இருக்கீங்களா நான் கோவையில் நகை தொழில் செய்யும் நபர்.கடந்த 18 வருடங்களாக பெரிய கடை வீதியில் நகை தொழில் புரிகிறேன் .நீங்களும் ஒரு நகை தொழில் புரிபவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நகை தொழில் புரிபவர் படும் கஷ்டங்கள் பற்றியும் தயவு செய்து ஒரு பதிவு எழுதவும் .நான் தற்சமயம் ஆன்லைன் வர்த்தகம் செய்கிறேன் .சிம்பா ,சாய் சார் எல்லோரும் என் நண்பர்கள்.உங்களிடம் நட்பு கொள்ள ஆசை படுகிறேன் ,

RAMYA said...

ஜீவன் கால தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

RAMYA said...

உங்கள் பதிவு மிக அருமையானதாக இருந்தது.

நல்ல பல எடுத்துக் காட்டுகளுடன் அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.

சாதரணமாக நகை வாங்கி விடுகிறோம். அதில் உள்ள தொழில் நுணக்கங்கள் அங்கே ஆராயப்படுவது இல்லை.

ஏதோ போறோம் வாங்குகிறோம் என்று தான் இருக்கின்றோம்.

ஆனால் உண்மை நிலவரம் உங்கள் பதிவு மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறது.

கடைக்காரர்களும் AC / Show Room Decoration/ Show Room Rent இப்ப்படி பல வகைகளிலும் அவர்களின் செலவுகளை நகைகள் மீது சுமத்துகிறார்கள்.

அந்தச்சுமை நகை வாங்கும் நம்மை
வந்து அடைகிறது.

RAMYA said...

//
நகை தொழில் செய்து கொண்டு நகை
தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலி பற்றி நான் விமர்சனம் செய்ய சில சமரசங்களை செய்ய வேண்டி இருக்கிறது.

ஆனால் அந்த தொழிலில் யாராவது மோசடி செய்தால் அதை எடுத்து சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
//

சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள். வாழ்க்கையில் சமரசங்கள் தான் அதிகமாக இருக்கின்றது ஜீவன்.

RAMYA said...

//
91.6 என்ற முத்திரை மட்டும் இடப்பட்டு தரம் குறைந்த
நகை விற்பனை செய்ய படுகிறது.
//

நம்பி தானே வாங்குகின்றோம்
இப்படி செய்தால் ஏமாறுகிறவர்கள்
தான் அதிகம் இருபபார்கள்.

RAMYA said...

//
அந்த நகைகடையில் பெற்று கொள்ளவேண்டும்.

சென்னை,மதுரை,கோவை போன்ற நகரங்களில் இருபத்து ஐந்து ரூபாய் செலவில் உங்கள் நகையை
சோதித்து கொள்ளும் வசதி உள்ளது.
//

இதுவும் நல்ல அறிவுரை.

RAMYA said...

//
91.6 kdm நகைகளை மட்டும் வாங்குங்கள்
ஏமாற்றத்தை தவிருங்கள்!!
//

ரொம்ப தெளிவா விளக்கி இருக்கிறீர்கள்

நகை வாங்க தடை இல்லை.
ஆனால் எல்லாம் தெளிவாக தெரிந்து
கொண்டு நகை வாங்குவது அவசியம்.

உங்கள் பதிவு கண்டிப்பாக எல்லாருக்கும் உபயோகமானதாக இருக்கும்.

அனைவருக்கும் தங்கம் வாங்குமுன் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை
தெள்ளத் தெளிவான விளக்கம் அளித்த்ததிற்கு மிக்க நன்றி ஜீவன்!!

ராமலக்ஷ்மி said...

மிக உபயோகமான பதிவு ஜீவன். பல விஷயங்களைப் பற்றி இருந்து வந்த சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்ள முடிந்தது.

//91.6 kdm நகைகளை மட்டும் வாங்குங்கள்//

சரி. பல வருடங்களுக்கு முன்னர் செய்யப் பட்ட நகைகளை 91.6 kdm ஆக தற்கால டிசைனுக்கு மாற்றி விடலாம் எனப் பார்த்தால், கடையிலேயே அவை '18 அல்லது 20 கேரட்டில் இருந்தாலும் மிக நல்ல தங்கம்’ என்றும் 'மாற்றாதீர்கள்' என்றும் அறிவுருத்துகிறார்கள். இன்னும் வருடங்கள் செல்ல அந்த மாதிரியான நகைகளின் வேல்யூ எப்படிப் பார்க்கப் படும்? அல்லது மாற்றிடல் நல்லதா?

Poornima Saravana kumar said...

உபயோகமான பதிவு அண்ணா!!

தாரணி பிரியா said...

நல்ல பதிவு அண்ணா

உம் நானும் உப்பார வீதியில எல்லாம் பாத்து இருக்கேன். மண்ணை எடுத்து சலிச்சுட்டு இருப்பாங்க :)

அப்புறம் கல்லு வெச்ச எடுக்கற நகையை திரும்ப விக்கும்போது ரொம்பவே விலை குறைக்கறாங்களே அது ஏன் ?

தமிழ் அமுதன் said...

////அன்புமணி said...

நல்ல பதிவு. நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது///


வாங்க அன்புமணி! வருகைக்கு நன்றி!!!

தமிழ் அமுதன் said...

/// மங்கை said...

நல்ல பதிவு அமுதன்...பயனுள்ள தகவல்கள்..////

வாங்க!! மங்கை மேடம்!!! மிக்க நன்றி வருகைக்கும், கருத்துக்கும்!!

தமிழ் அமுதன் said...

//// இராகவன் நைஜிரியா said...

அண்ணே.. தங்கம் விலை 11,000 க்கு மேல் போய்விட்டதே...

நம்ம மாதிரி உள்ளவங்களுக்கு தங்கம் இனி எட்டாக்கனிதான் நினைக்கின்றேன்////


ஆமாங்கண்ணே!! ரொம்பதான் ஏறி போச்சு!!

கனி ரொம்ப கனிஞ்சுட்டா கீழ விழுந்துதானே ஆகணும்?
காத்திருப்போம்!!!

தமிழ் அமுதன் said...

//// கோவை சக்தி said...

அன்பு நண்பர் ஜீவன் ,
நலமாக இருக்கீங்களா நான் கோவையில் நகை தொழில் செய்யும் நபர்.கடந்த 18 வருடங்களாக பெரிய கடை வீதியில் நகை தொழில் புரிகிறேன் .நீங்களும் ஒரு நகை தொழில் புரிபவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நகை தொழில் புரிபவர் படும் கஷ்டங்கள் பற்றியும் தயவு செய்து ஒரு பதிவு எழுதவும் .நான் தற்சமயம் ஆன்லைன் வர்த்தகம் செய்கிறேன் .சிம்பா ,சாய் சார் எல்லோரும் என் நண்பர்கள்.உங்களிடம் நட்பு கொள்ள ஆசை படுகிறேன் ////

வாங்க நண்பரே!!

நம்ப குரு...'' பங்கு வணிகம்'' திரு, சரவணகுமார் அவர்களின்
''பைசா பவர்'' சாட்டில் வந்த கோவை சக்திதானே நீங்க?
மிக்க நன்றி நண்பரே! உங்க வருகைக்கும், கருத்துக்கும்!

தமிழ் அமுதன் said...

//// RAMYA said...

உங்கள் பதிவு மிக அருமையானதாக இருந்தது.///

வாங்க ரம்யா! உங்களின் அனைத்து கருத்துகளும் அருமை!
உங்கள் கருத்துக்கள் எனது பதிவிற்கு,பக்க பலமாக இருப்பதை போல
உணர்கிறேன் மிக்க நன்றி!!!

தமிழ் அமுதன் said...

/// ராமலக்ஷ்மி said...

மிக உபயோகமான பதிவு ஜீவன். பல விஷயங்களைப் பற்றி இருந்து வந்த சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்ள முடிந்தது.

//91.6 kdm நகைகளை மட்டும் வாங்குங்கள்//

சரி. பல வருடங்களுக்கு முன்னர் செய்யப் பட்ட நகைகளை 91.6 kdm ஆக தற்கால டிசைனுக்கு மாற்றி விடலாம் எனப் பார்த்தால், கடையிலேயே அவை '18 அல்லது 20 கேரட்டில் இருந்தாலும் மிக நல்ல தங்கம்’ என்றும் 'மாற்றாதீர்கள்' என்றும் அறிவுருத்துகிறார்கள். இன்னும் வருடங்கள் செல்ல அந்த மாதிரியான நகைகளின் வேல்யூ எப்படிப் பார்க்கப் படும்? அல்லது மாற்றிடல் நல்லதா?///


வாங்க அம்மா!!! 91.6 நகை எனப்படுவது ஆபரண தங்கத்தில் 91.6
சதவீதம் தூய தங்கம் இருக்கும் அதுதான் 22ct தங்கம்.
20ct தங்கத்தில் 91.6 சதவீதத்தைவிட தூய தங்கம் குறைவாய் இருக்கும்
18ct தங்கம் இன்னும் குறைவாய் இருக்கும். இதுதான் உண்மை நிலை.
18ct அல்லது 20ct இருந்தாலும் நல்ல தங்கம் எப்படி ? அது தரம் குறைவாகத்தான் இருக்கும். அது உங்கள் பாரம்பரிய நகையாய் இருப்பின் அப்படியே வைத்து கொள்ளுங்கள்.மேலும் அது கல்வைத்த நகையாய் இருந்தால் அது குறைவான மதிப்பிலேயே எடுத்து கொள்வார்கள். இது நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் அதனால் அப்படியே வைத்துக்கொள்ள அறிவுறுத்த பட்டு இருக்கலாம்!!

தமிழ் அமுதன் said...

// Poornima Saravana kumar said...

உபயோகமான பதிவு அண்ணா!!//

நன்றி!! பூர்ணிமா!!

தமிழ் அமுதன் said...

/// தாரணி பிரியா said...

நல்ல பதிவு அண்ணா

உம் நானும் உப்பார வீதியில எல்லாம் பாத்து இருக்கேன். மண்ணை எடுத்து சலிச்சுட்டு இருப்பாங்க :)

அப்புறம் கல்லு வெச்ச எடுக்கற நகையை திரும்ப விக்கும்போது ரொம்பவே விலை குறைக்கறாங்களே அது ஏன் ?///

வாங்க, தாரணி பிரியா!!

கல்வைத்த நகையை திரும்ப விற்கும்போது அதில் உள்ள கற்களை
நீக்கிவிட்டுத்தான் எடை போடுவார்கள்.அதனால் எடை குறைந்து விடும்.
மேலும் கல்லுக்கு மறு மதிப்பு கிடையாது.பயன்படுத்திய கற்களை
மீண்டும் பயன்படுத்த முடியாது.

ராமலக்ஷ்மி said...

நன்றி ஜீவன்.

Rajeswari said...

அதெல்லாம் இருக்கட்டும் ..எப்போ தங்கம் விலை குறையும்னு சொல்லுங்க ....
எங்க அப்பா என்னோட பங்க குறைசுருவார் போல இருக்கே

malar said...

நல்ல பயனுள்ள பதிவு

கனி ரொம்ப கனிஞ்சுட்டா கீழ விழுந்துதானே ஆகணும்?
காத்திருப்போம்!!!

அதெல்லாம் இருக்கட்டும் ..எப்போ தங்கம் விலை குறையும்னு சொல்லுங்க ....

ஒரு கிராம் தங்கத்தின் விலை 107 DH.ஏன் இந்த விலை ஏற்றம் ?

malar said...

கல் வைத்த நகை வாங்கும் போது கல்லையும் தங்கத்தின் இடையிலேயே இடை போட்டு தருகிறார்கள் .விற்கும் போது தலை கீழ் .அது ஏன் ?

Good citizen said...

வணக்கம் ஜீவன் சார்,

ஒரு நகைத் தொழிலாளியாக உங்கள் விளக்கம்
அருமை,நன்றிகள் பல,,,
ஆனால் இராகவன் சார் பதிவுக்கு பின்னுட்டம் இட்ட பல வெளிநாட்டவர்களில் நானும் ஒருவன்(பிரான்ஸ்)அதில் முக்கியமாக
கவனிக்கப் படவேண்டிய விஷயம்...
பல நாடுகளில் சேதாரத்துக்கான தனித்தொகை என்று ஒன்று கிடையாது என்பதுதான்.நகையில் விலை சேல்டக்ஸ் உல்பட விலை ஒட்டப்பட்டிருக்கும்.அதற்கு கூடவோ
குறைவோ நாம் எந்த தொகையையும்
கொடுக்க தேவையில்லை.இந்த பகல்
கொள்ளை இந்தியாவில் மட்டுமே
சாத்தியம்.அதுமட்டுமில்லை அவர்கள்
போடும் சேதாரத் தொகையை நாம் பேரம்பேசிக் குறைக்க முடியும்(நான் குறிப்பிடுவது பெரிய பேர்ப்போன????
கடைகளில்) சொந்த அனுபவம்.
நிர்ணயித்த சேதாரத் தொகையை நாம்
பேரம்பேசி குறைக்க முடியுமென்றால்
அந்த தொகை நிச்சயமாய் குறுட்டம்போக்காய் நிச்சயிக்கப் படுகிறது என்பதுதானே உண்மை.
அதிலும் நாம் பில் கேட்டால் நம்மை
நாயைப் பார்பதுபோல் பார்ப்பார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கவியாபாரம் என்பது ஒரு பகற்
கொள்ளைதான்.அதை மாற்ற நம்மால் முடியாது.ஏதோ உங்களைப்
போன்ற நல்லவர்களால் என்னைப்
போன்ற சில பேர் ஓரளவாவது தப்பித்து கொள்ள முடியும் அவ்வளவே.இராகவன் சார் சொன்னதுபோல் நானும் ஜூலையில்
இந்தியா வருகிறேன்.முடிந்தால்
உங்களை சந்திக்கிறேன். முடிந்தவரையில் இந்த பகல்கொள்ளையிலிருந்து எங்களைக்
காப்பாத்துப்பா சாமி,,,,,....

Thamiz Priyan said...

நல்ல உபயோகமான பதிவு!

தமிழ் அமுதன் said...

/// ராமலக்ஷ்மி said...

நன்றி ஜீவன்.////

;;)))

தமிழ் அமுதன் said...

//// Rajeswari said...

அதெல்லாம் இருக்கட்டும் ..எப்போ தங்கம் விலை குறையும்னு சொல்லுங்க ....
எங்க அப்பா என்னோட பங்க குறைசுருவார் போல இருக்கே////

பாருங்கப்பா...தங்கம் விலை ஏறி போச்சேன்னு ஒவ்வொருத்தருக்கும்
ஒரு கவலை. இந்த அம்மாவ பாருங்க எப்படிப்பட்ட கவலைனு?

தங்க விலை குறைஞ்சாதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அப்பா கிட்ட
தீர்மானமா சொல்லிடுங்க! நம்ம பொண்ணு நம்மமேல எவ்ளோ அக்கறையா இருக்குன்னு அப்பா சந்தோஷ படுவார். (விஷயம் புரியாம)

தமிழ் அமுதன் said...

/// malar said...

நல்ல பயனுள்ள பதிவு///

மிக்க நன்றி!

///அதெல்லாம் இருக்கட்டும் ..எப்போ தங்கம் விலை குறையும்னு சொல்லுங்க ....
ஒரு கிராம் தங்கத்தின் விலை 107 DH.ஏன் இந்த விலை ஏற்றம் ?///

தங்க விலை ஏற்றம் ஒரு உலகளாவிய பிரச்சனை!

ஒரு கிராம் 107 dh ஆனதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை! ;;))))

தமிழ் அமுதன் said...

///malar said...

கல் வைத்த நகை வாங்கும் போது கல்லையும் தங்கத்தின் இடையிலேயே இடை போட்டு தருகிறார்கள் .விற்கும் போது தலை கீழ் .அது ஏன் ?///

கல் வைத்த நகை வாங்கும்போது தங்கத்தின் எடையுடன்
கல் எடையும் இருக்கும். விற்கும்போது கல்லை நீக்கி விட்டு எடுத்து கொள்வார்கள்
அந்த கல்லை மீண்டும் பயன்படுத்த முடியாது.

தமிழ் அமுதன் said...

//// moulefrite said...

.இராகவன் சார் சொன்னதுபோல் நானும் ஜூலையில்
இந்தியா வருகிறேன்.முடிந்தால்
உங்களை சந்திக்கிறேன். முடிந்தவரையில் இந்த பகல்கொள்ளையிலிருந்து எங்களைக்
காப்பாத்துப்பா சாமி,,,,,....////

வாங்க ''moulefrite'' நன்றி கருத்துக்கு!
வரும்போது சந்திக்கலாம் என்னால் முடிந்ததை
செய்கிறேன்!! நன்றி!!1

தமிழ் அமுதன் said...

/// தமிழ் பிரியன் said...

நல்ல உபயோகமான பதிவு!///

நன்றி!!! தமிழ் பிரியன்!!

Rajeswari said...

//நம்மமேல எவ்ளோ அக்கறையா இருக்குன்னு அப்பா சந்தோஷ படுவார். (விஷயம் புரியாம) //
எப்படி இப்படியெல்லாம்? ஜூன் கல்யாணம் வந்துருங்க ஜீவன் சார்

தமிழ் அமுதன் said...

/// Rajeswari said...

//நம்மமேல எவ்ளோ அக்கறையா இருக்குன்னு அப்பா சந்தோஷ படுவார். (விஷயம் புரியாம) //
எப்படி இப்படியெல்லாம்? ஜூன் கல்யாணம் வந்துருங்க ஜீவன் சார்///

கல்யாணத்துக்கு தானே வந்துட்டா போச்சு!

ஜூன்ல தங்கம் விலை கொறஞ்சாலும் கொறையும்!

உங்க பங்கு கொறயாது! சந்தோசபடுங்க!!!!

Learn Speaking English said...

பதிவும் டிஸ்கசனும் படு சூப்பர்

Unknown said...

sir, am senthil from salem. i wish to purchase the gold jewel in abudhabi (Dubai). it was right decision or wrong. whether it was right or wrong pls tell me the reason. i don't know about gold jewells.

shiva said...

மிக பயனுள்ள தகவல், நகை வாங்கும் பொழுது கண்டிப்பாக உங்களை அழைத்துசென்று தான் வாங்கணும், ஏன் என்றால் கடைகாரர்கள் போடும் கணக்கு புரியமட்டேன்குது,